பட்டங்களை துறந்த இளவரசர் ஆண்ட்ரூ: ஒற்றை வார்த்தையில் மன்னர் சார்லஸ் எதிர்வினை
இளவரசர் ஆண்ட்ரூ தனது அரச பட்டங்களை துறந்ததை அடுத்து பிரித்தானிய மன்னர் சார்லஸ் ஒற்றை வார்த்தையில் அதற்கு பதிலளித்துள்ளார்.
இளவரசர் ஆண்ட்ரூ முடிவு
பாலியல் குற்றவாளியான ஜெஃப்ரி எப்ஸ்டீன் விவகாரம், சீனா உடனான தொடர்பு போன்ற முக்கிய விவகாரங்களால் பிரித்தானிய அரச குடும்பத்திற்கு ஏற்பட்ட நெருக்கடிகளை தொடர்ந்து பிரித்தானிய இளவரசர் ஆண்ட்ரூ வின் பட்டங்கள் மற்றும் பதவிகள் அனைத்தும் பறிக்கப்பட்டுள்ளது.
இளவரசர் ஆண்ட்ரூ தாமாகவே முன்வந்து யார்க் ஆப் டியூக்(Duke of York), ஆர்டர் ஆப் தி கார்ட்டர் (Order of the Garter) போன்ற பட்டங்கள் மற்றும் பதவிகள் அனைத்தையும் கைவிட ஒப்புக்கொண்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸ் மற்றும் இளவரசர் வில்லியம் ஆகியோருடன் நடத்திய நெருங்கிய ஆலோசனைக்கு பிறகு இளவரசர் ஆண்ட்ரூ இந்த முடிவை வெள்ளிக்கிழமை இரவு வெளியிட்டுள்ளார்.
ஒற்றை வார்த்தையில் பதிலளித்த மன்னர்
பிரித்தானிய அரச குடும்பத்திற்கு நீண்ட நாட்களாக நெருக்கடி ஏற்படுத்திய வந்த பிரச்சினையில் தீர்வு காணப்பட்டுள்ள நிலையில், இளவரசர் ஆண்ட்ரூ வின் முடிவுக்கு பிரித்தானிய மன்னர் சார்லஸ் ஒற்றை வார்த்தையில் பதிலளித்துள்ளார்.
அதில், இளவரசர் ஆண்ட்ரூ தன்னுடைய பட்டங்களை ஒப்படைத்ததில் “மகிழ்ச்சி” என மன்னர் தெரிவித்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |