பிரித்தானியாவில் கத்திக்குத்து சம்பவங்கள் அதிகம் நடக்கும் பகுதிகள் இதுதான்: வெளியான பட்டியல்
பிரித்தானியாவில் அதிகமாக கத்திக்குத்து சம்பவங்கள் நடக்கும் பகுதி எதுவென தகவல் வெளியாகியுள்ளது.
வாள்வெட்டு குற்றச்செயல்கள்
பொதுவாக தலைநகர் லண்டனில் தான் அதிகமாக கத்திக்குத்து சம்பவங்கள் அரங்கேறுவதாக கூறப்படும். ஆனால் புதிய ஆய்வில் அப்படி இல்லை என்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
2022ல் மட்டும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வாள்வெட்டு தொடர்பான குற்றச்செயல்களின் எண்ணிக்கை 49,265 என பதிவாகியுள்ளது. இந்த வாரத்தில் மட்டும் நார்தாம்ப்டன் பல்கலைக்கழக வளாகத்திற்கு வெளியே 19 வயது இளைஞர் கத்திக்குத்துக்கு பரிதாபமாக பலியானார்.
Credit: thesun
கடந்த மாதம் லீட்ஸ் பகுதியில் டாக்ஸி ஒன்றில் 18 வயது இளைஞர் கத்தியால் தாக்கப்பட, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இந்த நிலையில் பிரித்தானியாவில் கத்தியால் தாக்குதலுக்கு இலக்காகும் பகுதி எதுவென ஆய்வில் தெரியவந்துள்ளது.
தற்போதைய சூழலில் கத்திக்குத்து சம்பவங்கள் அதிகமாக நடக்கும் பகுதி மேற்கு மிட்லாண்ட்ஸ் என கூறப்படுகிறது. இப்பகுதியில் 1,000 பேர்களுக்கு 161 கத்திக்குத்து வழக்குகள் பதிவாகும் மோசமான நிலை இருப்பதாக பொலிசார் தெரிவிக்கின்றனர்.
மோசமான இடம் க்ளீவ்லேண்ட்
கடந்த ஆண்டில் இப்பகுதியில் சுமார் 4,938 சம்பவங்கள் பதிவானதில், 22 பேர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர். இங்கிலாந்தில் கத்திக்குத்து குற்றத்தில் இரண்டாவது மோசமான இடமாக க்ளீவ்லேண்ட் கண்டறியப்பட்டுள்ளது.
Credit: thesun
இப்பகுதியிலும் 1,000 பேர்களுக்கு 161 வழக்குகள் கத்திக்குத்து தொடர்பில் பதிவாகியுள்ளது. லண்டனில் இந்த எண்ணிக்கை 137 எனவும் ஒட்டுமொத்த பிரித்தானியாவில் லண்டன் நகரம் மூன்றாவது இடத்தில் உள்ளது எனவும் தெரிவிக்கின்றனர்.
2021ல் லண்டன் மாநகரில் கத்திக்குத்து தாக்குதலுக்கு 30 இளைஞர்கள் பலியாகியுள்ளது அதிகாரிகள் தரப்பில் கவனத்தை ஈர்த்திருந்தது.
அந்தவகையில் டோர்செட் பகுதி பாதுகாப்பானதாகவே பார்க்கப்படுகிறது. இங்கு 1,000 பேருக்கு 37 கத்திக்குத்து தொடர்பான குற்றங்கள் பதிவாகியுள்ளன.