பிரதமரின் வாக்குறுதியை நிறைவேற்றுவதில் சிக்கல்., தொழிலாளர் தட்டுப்பாட்டில் பிரித்தானியா
லட்சக்கணக்கான வீடுகளை கட்டித்தருவதாக கூறிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் வாக்குறுதியை நிறைவேற்ற பிரித்தானியாவில் போதுமான தொழிலாளர்கள் இல்லை.
பிரித்தானியாவில் 2029-க்குள் 1.5 மில்லியன் வீடுகள் கட்டப்படும் என்ற அரசின் வாக்குறுதி மிகப்பாரிய சவாலாக மாறியுள்ளது.
ஏனெனில் நாட்டில் தகுதி வாய்ந்த கட்டிடத் தொழிலாளர்கள் தட்டுப்பாடு உள்ளது என தொழில் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
Bricklaying, carpentry மற்றும் groundworks ஆகிய தொழில்களில் 10 ஆயிரக்கணக்கான புதிய நிபுணர்கள் தேவைப்படுகிறது.
HBF (Home Builders Federation) மற்றும் Barratt Redrow போன்ற நிறுவனங்கள் குறைந்த கூலி, வயதான தொழிலாளர்கள் மற்றும் பிரெக்சிட் காரணமாக உருவாகியுள்ள பணியாளர் குறைபாடு ஏற்பட்டுள்ளதாக அடையாளம் காட்டியுள்ளன.
பிரித்தானியாவில் தற்போது 2.67 மில்லியன் கட்டிடத் தொழிலாளர்கள் உள்ளனர். 10,000 வீடுகள் கட்ட 30,000 தொழிலாளர்கள் தேவைப்படும். 1.5 மில்லியன் வீடுகள் கட்ட 20,000 bricklayers, 2,400 plumbers, 8,000 carpenters, 3,200 plasterers, 20,000 groundworkers, 1,200 tilers, 2,400 electricians, 2,400 roofers மற்றும் 480 engineers என பல தொழில்களில் திறமையான தொழிலாளர்கள் தேவைப்படுகிறது.
பிரித்தானியாவில் இளைஞர்களை தொழில்முறைகள் சார்ந்த பயிற்சிகளுக்கு கொண்டு வருவதில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் குறைந்த கவனம் உள்ளதாக HBF போன்ற நிறுவனங்கள் தெரிவிக்கின்றன.
பிரெக்சிட் மற்றும் பொருளாதார தாக்கங்கள்
2008 நிதி நெருக்கடிக்கு பின்னர், 40%-50% தொழிலாளர்கள் துறையை விட்டு சென்றனர். மேலும், பிரெக்சிட் காரணமாக ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து தொழிலாளர்களை பணியமர்த்துவது கடினமாகியுள்ளது.
அரசின் முயற்சியாக, கடந்த மாதம் 140 மில்லியன் பவுண்டு நிதியுடன் 5,000 புதிய கட்டுமான பயிற்சிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
Barratt Redrow போன்ற நிறுவனங்கள் அரசின் திட்டங்களை வரவேற்றுள்ளன. அதேசமயம், பிளான் கவுன்சில்கள், இந்த இலக்கை அடைவது சாத்தியமல்ல என தெரிவித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK does not have enough construction workers, United Kingdom lack of Workers, Keir Starmer Promise