பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் குழந்தைகளுடையதா? பொலிஸார் பகீர் தகவல்!
பிரித்தானியாவில் கண்டெடுக்கப்பட்ட மனித எச்சங்கள் குழந்தைகளுடையதாக இருக்கலாம் என்று பொலிஸார் அறிவித்துள்ளனர்.
மனித எச்சங்கள் கண்டுபிடிப்பு
ஆகஸ்ட் 15ம் திகதி லைதம், லங்காஷயரின், கிளீவ்லேண்ட் சாலையில் உள்ள குடியிருப்பு பகுதியில் கட்டுமான பணியில் ஈடுபட்டு இருந்த ஊழியர்கள் மனித எச்சங்கள் என நம்பப்படும் சிலவற்றை கண்டுபிடித்தனர்.
இதையடுத்து உடனடியாக கட்டுமானப் பணியாளர்கள் பொலிஸாருக்கு தகவல் அளித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்கள் மனிதர்களுடையது தான் என்பதை உறுதிப்படுத்தினர்.
மேலும் இவை வரலாற்று நிகழ்வுகளுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும், இதில் சந்தேகத்திற்குரிய நடவடிக்கைகள் எதுவும் இல்லை என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குழந்தைகளுடைய எச்சங்கள்
இதற்கிடையில் பொலிஸார் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், கண்டுபிடிக்கப்பட்ட மனித எச்சங்கள் குழந்தைகளுடயதாக இருக்கலாம் என்றும், இது தனிப்பட்ட வரலாற்று புதைப்பு நடவடிக்கையாக நம்பப்படுகிறது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கண்டுபிடிக்கப்பட்ட எச்சங்களின் வயது மற்றும் அடையாளங்களை கண்டுபிடிக்க தொடர்ந்து தடயவியல் பரிசோதனைகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |