மத்திய லண்டன் ரயில்வேயில் பயங்கர தீவிபத்து...தீயணைப்பு துறை முக்கிய அறிவிப்பு!
- மத்திய லண்டனின் சவுத்வார்க்கில் உள்ள ரயில்வே பகுதியில் பயங்கர தீவிபத்து.
- பொதுமக்கள் தங்கள் ஜன்னல் கதவுகளை மூடிக் கொள்ளுமாறு தீயணைப்பு வீரர்கள் அறிவுரை.
பிரித்தானியாவின் மத்திய லண்டனின் சவுத்வார்க்கில் உள்ள ரயில்வே பகுதியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தற்போது கட்டுக்குள் கொண்டுவந்து இருப்பதாக லண்டன் தீயணைப்பு சேவைகள் மையம் தெரிவித்துள்ளது.
மத்திய லண்டனின் சவுத்வார்க்கில்(Southwark) உள்ள ரயில்வே வளைவு (railway arch) பகுதியில் புதன்கிழமை பயங்கர தீ விபத்து ஏற்பட்டது, இதில் அப்பகுதியில் உள்ள பல கட்டிடங்கள் பாதிக்கப்பட்டதுடன், அப்பகுதிக்கான ரயில் சேவைகளும் நிறுத்தப்பட்டது.
The fire in #Southwark is producing smoke which can be seen from miles around. Contrary to some media reports, there is not a fire at #LondonBridge Underground Station. Crews investigated smoke issuing & determined this was from the fire on Union Street https://t.co/5xIpC4mpKN pic.twitter.com/U4UOI62BLw
— London Fire Brigade (@LondonFire) August 17, 2022
இந்த தீவிபத்தை கட்டுப்படுத்த சுமார் 10 தீயணைப்பு வாகனங்கள் மற்றும் சுமார் 70 தீயணைப்பு வீரர்கள் வரை ஈடுபடுத்தப்பட்டனர்.
மேலும் இந்த விபத்தில் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை என்றும், தீ விபத்திற்கான காரணம் குறித்து புலனாய்வு பிரிவு விசாரணை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து சவுத்வார்க் மற்றும் லண்டன் பாலம் நிலையங்கள் இரண்டும் மூடப்பட்டன.
UPDATE 1010: We've got all 4 lines blocked through Ewer Street junction at the moment owing to the fire. This picture from @traksyuk shows the area affected. Please check with @Se_Railway + @TLRailUK for how you can complete your journeys. pic.twitter.com/CqJygBKimN
— Network Rail Kent & Sussex (@NetworkRailSE) August 17, 2022
இதுத் தொடர்பாக தீயணைப்பு துறை வெளியிட்ட வீடியோ காட்சிகளில் ரயில்வே வளைவின் அடியில் இருந்து பெரிய அளவிலான புகை வருவதை காட்டுகிறது, மேலும் தீ முற்றிலுமாக இறங்கி விட்டது என்றும் தீயணைப்புப் படை தெரிவித்துள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: இலங்கை திரும்பும் கோட்டாபய ராஜபக்ச...திகதியை அறிவித்த முன்னாள் ஜனாதிபதியின் உறவினர்
ஆனால் தீயினால் கடும் புகை மூட்டப்பட்டு இருப்பதால். உள்ளூர் பகுதியில் வசிப்பவர்கள் அல்லது வேலை செய்பவர்கள் தங்கள் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடி வைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள் என்று ஸ்டேஷன் கமாண்டர் வெய்ன் ஜான்சன் தீயணைப்பு சேவையின் இணையதளத்தில் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.