பிரித்தானியாவில் முதல் Rapid-Charging Battery ரயில் அறிமுகம்
பிரித்தானியாவில் முதல் Rapid-Charging Battery ரயில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய ரயில், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து மற்றும் கார்பன் உமிழ்வை குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது.
இந்த ரயில், 15 நிமிடங்களில் முழுமையாக சார்ஜ் ஆகும் திறன் கொண்டது. இதில் ரயிலுடன் இணைக்கப்பட்ட 2000KW சார்ஜர் பயன்படுத்தப்படுகிறது.
இந்த ரயில் ஒரே சார்ஜில் 200 மைல்களுக்கு மேல் செல்லும் திறன் கொண்டது. இதில் 273 பயணிகளை ஏற்றிச்செல்ல முடியும்.

இதன் மூலம், பாரம்பரிய டீசல் ரயில்களை மாற்றி, பசுமையான எரிசக்தி பயன்பாட்டை ஊக்குவிக்க முடியும்.
இந்த பேட்டரி ரயில், நாட்டின் ரயில் போக்குவரத்தை நவீனப்படுத்தும். கார்பன் உமிழ்வை குறைத்து, பயணிகளுக்கு சுத்தமான மற்றும் அமைதியான பயண அனுபவத்தை வழங்கும் என அதிகாரிகள் கூறுகின்றனர்.
இந்த திட்டம், Network Rail மற்றும் Hitachi Rail இணைந்து உருவாக்கியது. ரயில், 100 மைல் வரை பயணிக்கக்கூடிய திறன் கொண்டது. குறிப்பாக, மின்சார பாதைகள் இல்லாத பகுதிகளில், இந்த ரயில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நல்ல தீர்வாக இருக்கும்.
இந்த முயற்சி பிரித்தானியாவின் Net Zero 2050 இலக்கை அடைய உதவும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
மேலும், எதிர்காலத்தில் இத்தகைய ரயில்கள் ஐரோப்பா மற்றும் பிற நாடுகளிலும் அறிமுகப்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK rapid charging battery train 2026, UK first battery-powered train news, Hitachi Rail battery train launch UK, Network Rail green transport project, UK Net Zero 2050 railway initiative, UK electric train rapid charging tech, UK sustainable transport innovations, UK battery train 15-minute charging, UK carbon-free railway future, UK eco-friendly train launch 2026