பிரித்தானியாவில் கிரிப்டோகரன்சியை அதிகாரப்பூர்வ சொத்தாக சட்டப்படி அங்கீகாரம்
பிரித்தானியாவில் கிரிப்டோகரன்சி அதிகாரபூர்வ சொத்தாக சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டது.
பிரித்தானிய பாராளுமன்றம் நிறைவேற்றிய Property (Digital Assets etc) Act சட்டத்திற்கு, மன்னர் மூன்றாம் சார்ல்ஸ் அரச ஒப்புதல் (Royal Accent) வழங்கியதன் மூலம், கிரிப்டோகரன்சி மற்றும் NFT போன்ற டிஜிட்டல் சொத்துக்கள் இனி அதிகாரப்பூர்வமாக சொத்துகளாக (Property) அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
முக்கிய அம்சங்கள்
இதுவரை, கிரிப்டோ சொத்துக்கள் நீதிமன்றங்களில் case-by-case அடிப்படையில் மட்டுமே சொத்தாக கருதப்பட்டன.
புதிய சட்டம், பாரம்பரிய சொத்து வகைகளான "things in possession" மற்றும் “things in action” ஆகியவற்றுடன் சேர்த்து, மூன்றாவது வகையாக டிஜிட்டல் சொத்துக்கள் என தனி பிரிவை உருவாக்குகிறது.
இதன் மூலம், கிரிப்டோ சொத்துக்கள் திருட்டு, மோசடி, திவால், மரபுரிமை போன்ற சட்ட நடைமுறைகளில் தெளிவாகக் கையாளப்படலாம்.

தொழில் மற்றும் அரசியல் எதிர்வினைகள்
கிரிப்டோ தொழில் சங்கங்கள், “இது பயனாளர்களுக்கு உரிமை பாதுகாப்பு மற்றும் நம்பிக்கை அளிக்கும் முக்கிய முன்னேற்றம்” என வரவேற்றுள்ளன.
CryptoUK அமைப்பு, “இனி பயனாளர்கள் தங்கள் டிஜிட்டல் சொத்துக்களை சட்டப்படி மீட்கும் உரிமை பெறுகின்றனர்” எனக் குறிப்பிட்டுள்ளது.
Gurinder Singh Josan MP, “இந்த மாற்றம், நுகர்வோருக்கு தெளிவான உரிமை, பாதுகாப்பு, மோசடியில் இழந்த சொத்துக்களை மீட்க வாய்ப்பு அளிக்கிறது” எனக் கூறியுள்ளார்.
இந்த சட்டம், பிரித்தானிய கிரிப்டோ துறைக்கு சட்டபூர்வ அடித்தளம் அமைத்து, உலகளாவிய முதலீட்டாளர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK crypto property law 2025 update, Britain digital assets legal recognition, UK Parliament passes crypto property act, King Charles royal assent crypto law, CryptoUK welcomes property rights protection, Gurinder Singh Josan MP crypto legislation, NFTs recognized as property UK law change, UK digital assets regulation global investors, Crypto fraud recovery UK property rights, UK blockchain regulation property act news