இளவரசர் வில்லியமுடைய 23 மில்லியன் பவுண்டுகள் வருவாய்க்கு உருவாகியுள்ள சிக்கல்
பிரித்தானிய இளவரசரான வில்லியமுடைய தனிப்பட்ட ஆண்டு வருமானம் 23 மில்லியன் பவுண்டுகள்.
இளவரசரான வில்லியமுடைய வருமானம்
ராஜகுடும்பத்தில் கார்ன்வால் கோமகன் என்னும் பதவியை வகிக்கும் நபருக்கு Duchy of Cornwall என்னும் சொத்து கிடைக்கும். இதற்கு முன் அது மன்னர் சார்லசுக்கு சொந்தமாக இருந்தது. அவர் மன்னரானதும், இளவரசர் வில்லியம் கார்ன்வால் கோமகன் ஆனார்.

ஆகவே அந்த சொத்தும் அவரை வந்தடைந்தது. அந்த Duchy of Cornwall என்னும் சொத்திலிருந்து வில்லியமுக்கு ஆண்டுக்கு 23 மில்லியன் பவுண்டுகள் வருவாய் வந்துகொண்டிருக்கிறது.
வருவாய்க்கு உருவாகியுள்ள சிக்கல்
இந்நிலையில், இளவரசர் வில்லியமுடைய அந்த 23 மில்லியன் பவுண்டுகள் வருவாய்க்கு சிக்கல் ஏற்படலாம் என கருதப்படுகிறது.
காரணம் என்னவென்றால், பிரித்தானிய அரசு, வருவாய் தொடர்பில் புதிய விதி ஒன்றை அறிமுகம் செய்ய உள்ளது.

பிரித்தானிய நாடாளுமன்றத்தில், The Commonhold and Leasehold Reform Bill என அழைக்கப்படும் மசோதா ஒன்றின் வரைவு நேற்று வெளியிடப்பட்டுள்ளது.
அந்த மசோதா நிறைவேற்றப்படும் நிலையில், இங்கிலாந்திலும், வேல்ஸ் நாட்டிலும், நிலம் வைத்திருப்பவர்கள் ஆண்டொன்றிற்கு 250 பவுண்டுகளுக்கு மேல் நிலத்தை குத்தகைக்கு விடமுடியாது.
மேலும், குத்தகைக்கு இருப்பவர்கள், 40 ஆண்டுகளுக்கு மேல் குத்தகைக்கு நிலத்தை வைத்திருக்கும்போது, அதன் பின், அந்த 250 பவுண்டுகளையும் செலுத்தத் தேவையில்லை. சும்மா பேருக்கு ஒரு சிறிய தொகையைக் கொடுத்தால் போதும்.
விடயம் என்னவென்றால், இளவரசர் வில்லியமுக்கு இங்கிலாந்திலும், வேல்ஸ் நாட்டிலும் எக்கச்சக்கமான நிலம் உள்ளது. அதிலிருந்து அவருக்கு வாடகையும் வந்துகொண்டிருக்கிறது. அந்த வருவாய்தான் அந்த 23 மில்லியன் பவுண்டுகள்.
தற்போது வில்லியமுடைய நிலத்தை குத்தகைக்கு எடுத்துள்ளவர்கள் 250 பவுண்டுகளுக்கும் அதிகமான குத்தகையை செலுத்துகிறார்கள்.
ஆக, இந்த மசோதா நிறைவேற்றப்படும் பட்சத்தில், அது இளவரசர் வில்லியமுடைய அந்த 23 மில்லியன் பவுண்டுகள் வருவாயை பாதிக்கும் என்பதை மறுப்பதற்கில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |