பிரித்தானியாவில் இரட்டை கத்திக்குத்து தாக்குதலில் 2 ஆண்கள் கொலை: இரண்டு ஆண்கள் கைது
பிரித்தானியாவின் லீட்ஸில் நடந்த கத்திக்குத்து சம்பவங்களில் இரண்டு பேர் உயிரிழந்த நிலையில், சந்தேகத்தின் பேரில் 2 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பிரித்தானியாவில் கத்திக்குத்து
பிரித்தானியாவின் லீட்ஸில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் இரண்டு ஆண்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
ஹரேஹில்ஸ், ஹில் டாப் அவென்யூ-வில் ஆண் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டதாக தகவல் கிடைத்ததை தொடர்ந்து சம்பவ இடத்திற்கு லீட்ஸ் பொலிஸாருக்கு விரைந்தனர்.
சனிக்கிழமை 11.06 மணியளவில் பேக் ஹில் டாப் அவென்யூ கண்டுபிடிக்கப்பட்ட நபர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாக அறிவிக்கப்பட்டார்.
மேலும் இரண்டாவது நபர் அதற்கு அருகில் உள்ள வீடு ஒன்றில் பலத்த காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் அவர் சிறுது நேரத்தில் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
2 பேர் கைது
இந்நிலையில் கையில் லேசான காயங்களுடன் கண்டுபிடிக்கப்பட்ட 46 வயதுடைய மூன்றாவது நபர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுவதற்கு முன்பு கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
மேலும் 48 வயதுடைய மற்றொரு நபரும் கொலை சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதற்கிடையில் விசாரணையின் ஒற்றை பகுதியாக சிறப்பு தேடுதல் மற்றும் தடயவியல் பரிசோதனை குழுக்கள் தேடுதலை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |