பிரித்தானியாவில் வீடு ஒன்றில் மர்மமாக இறந்து கிடந்த இருவர்: பொதுமக்களுக்கு பொலிஸார் வழங்கிய தகவல்
பிரித்தானியாவின் லெய்செஸ்டர் பகுதியில் உள்ள வீடு ஒன்றில் ஆண் மற்றும் 5 வயது சிறுவன் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சடலமாக மீட்கப்பட்ட இருவர்
பிரித்தானியாவின் லெய்செஸ்டர்( Leicester) பகுதியில் உள்ள வீடு ஒன்றில் இருந்து 5 வயது சிறுவன் மற்றும் 41 வயதுடைய ஆண் என இரண்டு பேர் உயிரற்ற சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளனர்.
ஹோப்யார்ட் குளோஸில்(Hopyard Close) உள்ள சொத்துக்கு திங்கட்கிழமை இரவு 9 மணியளவில் பொலிஸார் அழைக்கப்பட்டதை தொடர்ந்து இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
Sky news
சம்பவ இடத்திற்கு வந்த கிழக்கு மிட்லேண்ட் ஆம்புலன்ஸ் சேவை மற்றும் வான் ஆம்புலன்ஸ் சேவைகள் சம்பவ இடத்திலேயே இருவரும் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
பொதுமக்களுக்கு பொலிஸார் அறிவிப்பு
5 வயது சிறுவன் மற்றும் 41 வயதுடைய ஆண் என இரண்டு பேர் உயிரிழந்த வீட்டில் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் அடிப்படையில் யாரையும் நாங்கள் தேடவில்லை என்று தெரிவித்துள்ளனர்.
ஆனால் இருவரும் எவ்வாறு உயிரிழந்தனர் என்பது குறித்த பல கேள்விகள் எழுந்து இருப்பதாகவும், அது தொடர்பாக ஆராய்ந்து வருவதாகவும் தலைமை காவலர் மார்க் சின்ஸ்கி தெரிவித்துள்ளார்.
Skynews
மேலும் இந்த சம்பவத்தில் யாரையும் நாங்கள் தேடவில்லை, எனவே அண்டை வீட்டார் யாரும் பயப்பட தேவையில்லை என்பதை மீண்டும் உறுதியாக தெரிவித்துக் கொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு இரண்டு சிறப்பு அதிகாரிகள் ஆறுதல் வழங்கி வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |