பிரித்தானியாவின் மிகப்பாரிய ஸ்டீல் தொழிற்சாலைக்கு ஏற்பட்ட நிலை - கேள்விக்குறியான 1500 தொழிலாளர்கள் எதிர்காலம்
பிரித்தானியாவின் மூன்றாவது பாரிய எஃகு தொழிற்சாலை அரசு கட்டுப்பாட்டிற்கு மாறியது.
Liberty Steel நிறுவனத்தின் ஒரு பகுதியாக செயல்பட்ட Speciality Steels UK (SSUK) நிறுவனம், நூற்றுக்கணக்கான மில்லியன் பவுண்டுகள் கடனில் சிக்கியிருப்பதால், நிறுவனம் கட்டாயம் மூடப்படவேண்டும் என நீஎதிமன்றம் உத்தரவிட்டது.
இதனால், Rotherham மற்றும் Sheffield பகுதியில் உள்ள 1,500 தொழிலாளர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது.
SSUK நிறுவனம் தற்போது அரசு நியமித்துள்ள அதிகாரப்பூர்வ receiver மற்றும் Teneo ஆலோசனை நிறுவனத்தின் சிறப்பு மேலாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.
தொழிலாளர்களின் சம்பளத்தையும், தொழிற்சாலை செலவுகளையும் தற்காலிகமாக அரசாங்கமே ஏற்க ஒப்புக்கொண்டுள்ளது.
Liberty Steel நிறுவனத்தின் முக்கிய நிதி ஆதாரமான Greensill Capital திவாலாகிவிட்டதால் SSUK நிறுவனத்திற்கும் தாக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலைமை, பிரித்தானியாவின் எஃகு தொழில்துறையின் எதிர்காலம் குறித்து பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Liberty Steel UK, UK steel industry crisis, Rotherham steel plant, Sheffield steelworks shutdown, UK government steel takeover, Steel job losses UK