உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியல்: டாப் 10இல் இடம்பிடித்த பிரித்தானியா
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியலில் பிரித்தானியா முதல் 10 இடங்களுக்குள் வந்துள்ளது.
உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியல்
2026ஆம் ஆண்டுக்கான உலகின் தலைசிறந்த நாடுகள் பட்டியல் சமீபத்தில் வெளியானது.
பட்டியலில் முதலிடம் பிடித்துள்ள நாடு, சுவிட்சர்லாந்து. டென்மார்க் பட்டியலில் இரண்டாவது இடத்தையும், ஸ்வீடன் மூன்றாவது இடத்தையும் பிடித்துள்ளன.

முறையே, நான்காவது, ஐந்தாவது இடங்களைப் பிடித்துள்ள நாடுகள், ஜேர்மனியும் நெதர்லாந்தும். பட்டியலில் அமெரிக்கா 18ஆவது இடத்தையும், கனடா 19ஆவது இடத்தையும் பிடித்துள்ள நிலையில், பிரித்தானியா 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளது.
இந்த பட்டியலை, U.S. News & World Report என்னும் அமெரிக்க ஊடக நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
குடிமக்கள் நலம், கலாச்சாரம் மற்றும் சுற்றுலா, பொருளாதார மேம்பாடு, ஆளுகை, ஆரோக்கியம், உள்கட்டமைப்பு, இயற்கைச் சூழல், வாய்ப்புகள் ஆகிய காரணிகளை மதிப்பிடுவதன் மூலமே இந்த பட்டியல் உருவாக்கப்படுகிறது.

அந்த வகையில், 73.3 மதிப்பெண்களைப் பெற்றுள்ள பிரித்தானியா, கலாச்சாரம் மற்றும் சுற்றுலாவில் மூன்றாவது இடத்தையும், பொருளாதார மேம்பாட்டில் நான்காவது இடத்தையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |