பிரித்தானிய அமைச்சர் மீது முறைகேடு குற்றசாட்டு; பிரதமர் லிஸ் டிரஸ் அதிரடி நடவடிக்கை
பிரித்தானிய பிரதமர் லிஸ் டிரஸ் தனது அரசாங்கத்தில் வர்த்தக அமைச்சரை முறைகேடு செய்ததாகக் கூறி உடனடியாக பதவி நீக்கம் செய்தார்.
கோனர் பர்ன்ஸ் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் நீண்டகால கூட்டாளி ஆவார்.
அமைச்சர் கோனர் பர்ன்ஸ் (Conor Burns) மீது "கடுமையான தவறான நடத்தை பற்றிய அறிக்கையை" பெற்ற பிறகு, "உடனடியாக அமலுக்கு வரும் வகையில்" அவரை ராஜினாமா செய்யும்படி பிரதமர் லிஸ் டிரஸ் உத்தரவிட்டதாக அரசாங்கம் கூறியது.
இதையடுத்து, பொதுமக்களின் நியாயமான கோரிக்கையின்படி அனைத்து அமைச்சர்களும் "நடத்தையின் உயர் தரத்தை பராமரிக்க வேண்டும்" என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்தது. "இந்த குற்றச்சாட்டு குறித்து அறிவிக்கப்பட்டவுடன் பிரதமர் நேரடியாக நடவடிக்கை எடுத்தார்" என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவர் மீதான குற்றசாட்டுகளின் விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், தற்போது கன்சர்வேடிவ் கட்சியின் நாடாளுமன்றக் குழுவில் இருந்து கோனர் பர்ன்ஸ் நீக்கப்பட்டார் என்று கட்சிக்கான கொறடா அலுவலகம் தெரிவித்துள்ளது. இருப்பினும் அவர் சுயேச்சையாக பதவி வகிப்பார், அவர் இன்னும் அமைச்சராகவே இருப்பார் என்று கூறப்படுகிறது.
செவ்வாய்க்கிழமை இரவு பர்மிங்காமில் உள்ள ஒரு ஹோட்டலில், கன்சர்வேடிவ் கட்சி மாநாடு நகரில் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அவர் ஒரு இளைஞரிடம் தகாத முறையில் நடந்துகொண்டதாகக் கூறப்படுகிறது.
லிஸ் ட்ரஸ் அவர் மீது மிக விரைவாக நடவடிக்கை எடுத்ததாக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன, இது முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன் சக ஊழியர்களை இடைநீக்கம் செய்ய தயக்கம் காட்டியதற்கு நேர்மாறாக இருப்பதாக கூறுகின்றனர்.
இந்நிலையில், கோனர் பர்ன்ஸ், தனக்கெதிராக வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் மீதான விசாரணைக்கு ஒத்துழைப்பதாகவும், அவரது பெயரை இந்த குற்றத்திலிருந்து அழிக்க ஆவலுடன் இருப்பதாகவும் கூறியுள்ளார்.
பர்ன்ஸ் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சனின் நீண்டகால கூட்டாளி ஆவார், அவர் ஜூலை மாதம் பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.
ஜான்சனின் நிர்வாகத்தில் வடக்கு அயர்லாந்தின் அமைச்சராகப் பணியாற்றிய அவர் கடந்த மாதம் லிஸ் டிரஸ்ஸால் வர்த்தக அமைச்சராக நியமிக்கப்பட்டார்.