லண்டனில் சராசரி வீட்டு வாடகை மாதம் ரூ.11 லட்சம்! மேலும் உயர வாய்ப்பு
லண்டனில் வீட்டு வாடகை வாடகைகள் அதிகரித்துக் கொண்டே இருக்கும் என நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
அதிகரிக்கும் மாத வடக்கை
கடந்த ஆண்டின் நான்காம் காலாண்டில் பிரித்தானிய தலைநகர் லண்டனில் வாடகை சராசரியாக ஒரு மாதத்திற்கு லங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட 11,00,000 ரூபாயாக (£2,480) உயர்ந்தது.
சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, லண்டனின் உள் வாடகை முதல் முறையாக 3,000 பவுண்டுகளைத் தாண்டியது.
Getty Images
கடந்த ஆண்டு, லண்டனுக்கு வெளியே புதிதாக பட்டியலிடப்பட்ட சொத்துகளுக்கான சராசரி வாடகை 9.7 சதவீதம் அதிகரித்து, இதுவரை பதிவு செய்யப்படாத இரண்டாவது மிக உயர்ந்த வருடாந்திர வாடகை வளர்ச்சியைக் கண்டது. இது 2021-ஆம் ஆண்டிற்குப் பிறகு 9.9 சதவீதம் என்ற பெரிய ஆண்டு அதிகரிப்பைக் கண்டது.
வாடகைக்கு இருப்பவர்களுக்கு மேலும் மோசமான செய்தியாக, 2023-ஆம் ஆண்டில் பிரிட்டன் முழுவதும் வாடகை கேட்பது மேலும் 5 சதவீதம் உயரும் என்று Rightmove கணித்துள்ளது.
ஏனெனில், வாடகைக்கு விரும்புவோரின் எண்ணிக்கை மற்றும் கிடைக்கும் வாடகை வீடுகளின் எண்ணிக்கை ஆகியவற்றுக்கு இடையே உள்ள சமநிலையின்மை தான் இதற்கு காரணம்.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.