லண்டன் சாலையில் பள்ளிக்கு சென்ற சிறுமிக்கு கத்திக்குத்து: தப்பியோடிய டீன் ஏஜ் சிறுவன் கைது
பிரித்தானியாவில் பள்ளிக்கு செல்லும் வழியில் 15 வயது சிறுமியை டீன் ஏஜ் சிறுவன் ஒருவன் கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பள்ளி சிறுமிக்கு கத்திக்குத்து
தெற்கு லண்டனின் க்ராய்டன்(Croydon) பகுதியில் உள்ள விட்கிஃப்ட்(Whitgift) ஷாப்பிங் சென்டர் அருகில் 15 வயது சிறுமி ஒருவர் பள்ளிக்கு செல்லும் வழியில் 17 வயது டீன் ஏஜ் சிறுவன் ஒருவனால் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
வெல்லஸ்லி(Wellesley ) சாலையில் நடைபெற்ற இந்த சம்பவத்தை தொடர்ந்து அப்பகுதிக்கு விரைந்து சென்ற பொலிஸார் மற்றும் அவசர குழுவினர் சிறுமியின் உயிரை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினர்.
Sky News
இந்த சம்பவம் தொடர்பாக சாட்சியங்கள் தெரிவித்த தகவலில், சிறுமி கத்தியால் கழுத்தில் குத்தப்பட்டு பேருந்துக்கு அருகே சரிந்து விழுந்த உடனே பேருந்து சாரதி மற்றும் பிற பயணிகள் சிறுமியை காப்பாற்ற விரைந்தனர்.
ஒரு குழுவினர் கத்தியால் குத்திவிட்டு தப்பிச்சென்ற சிறுவனை விரட்டி பிடிக்க முயற்சித்தனர். காலை 8.30 மணியளவில் இந்த கத்திக்குத்து சம்பவம் நடந்த நிலையில், காலை 9.20 மணி அளவில் தாக்குதல் சம்பவத்தில் ஈடுபட்ட சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
Sky News
பொலிஸார் வழங்கிய தகவலின் படி, பாதிக்கப்பட்ட சிறுமியும், தாக்குதலில் இறங்கிய சிறுவனும் ஒருவரை ஒருவர் அறிந்தவர்கள், எனவே தாக்குதலுக்கான காரணம் குறித்து கைது செய்யப்பட்ட சிறுவனிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த சிறுமி
இந்நிலையில் கத்திக்குத்துக்கு ஆளான சிறுமி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டார்.
Sky News
இதற்கிடையில் உயிரிழந்த சிறுமியின் பெற்றோர்கள், நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு சிறப்பு அதிகாரிகள் ஆதரவு வழங்கி வருகின்றனர்.
பிரித்தானியாவில் பள்ளி சிறுமி ஒருவர் டீன் ஏஜ் சிறுவன் ஒருவரால் நடுரோட்டில் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் லண்டனில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |