கனடாவில் ஒரே நாளில் கோடீஸ்வரரான லண்டன் தொழிலாளி! லொட்டரியில் அடித்த அதிர்ஷ்டம்
கனடாவின் லண்டனைச் சேர்ந்த 47 வயதான உலோகத் தொழிலாளி ஒருவர் கோடிக்கணக்கிலான பரிசுத்தொகையை வென்றுள்ளார்.
லண்டனில் வசிக்கும் உலோக சீட் (Sheet Metal) தொழிலாளியான ஷேன் கூச்மேன் (Shane Couchman) லண்டனின் அடிலெய்டு தெருவில் உள்ள கிப்ஸ் லேன் மார்க்கெட்டில் கடந்த மாதம் லொட்டரி சீட்டு ஓன்றை வாங்கியுள்ளார்.
கனடாவின் ரொறன்ரோ நகரத்தில் OLG Prize Centre வெளியிட்ட ஜூன் 3-ஆம் திகதிக்கான LOTTO MAX draw எனும் லொட்டரி சீட்டை ஷேன் வாங்கினார். இந்த லொட்டரிக்கான பரிசுத்தொகை 1-மில்லியன் கனேடிய டொலர் (இலங்கை பண மதிப்பில் ரூ. 27.7 கோடி) ஆகும். இப்போது அவர் அந்த 1-மில்லியன் டொலர் பரிசை வென்றுள்ளார்.
அடுத்த பிரதமர் யார்? ரிஷி சுனக் வரிசையில் மற்றோரு இந்திய வம்சாவளி பெண்.!
பரிசுக்கான காசோலையை வாங்க ரொறன்ரோ வந்த ஷேன், "நான் சிறிய $20 பரிசுகளை வென்றுள்ளேன், ஆனால் இது எனது முதல் பெரிய வெற்றி!" என்று கூறினார்.
தனது சீட்டை ஸ்கேன் செய்து பரிசுத்தொகையை கண்டபோது "எப்படி உணருவது என்று தெரியவில்லை. நான் மிகவும் அதிர்ச்சியடைந்தேன். நான் பார்க்கும் அனைத்து பூஜ்ஜியங்களும் உண்மையானதா என்று எனக்குத் தெரியவில்லை.., என் மனைவி அதிர்ச்சியடைந்தாள். அவள் முதலில் என்னை நம்பவில்லை" என்று அவர் கூறினார்.
வெளியேறுவதற்குள் தனது திருமண விழாவை ஆடம்பரமாக நடத்த திட்டமிட்ட போரிஸ் ஜான்சன்!
Couchman தனது பரிசுத்தொகையை ஒரு விடுமுறை மற்றும் முதலீடுகளை நோக்கி வைக்க திட்டமிட்டுள்ளதாககே கூறினார்.
புற்றுநோயிலிருந்து மீண்ட பெண்ணுக்கு லொட்டரில் விழுந்த அதிர்ஷ்டம்!
3-வது முறையாக லொட்டரியில் கோடிக்கணக்கான பணத்தை வென்ற அதிர்ஷ்டசாலி பெண்!