3000 கோடி ரூபாய் ஓவியத்தின் மீது தக்காளி சூப்பை வீசிய இளம் பெண்கள் கைது
லண்டனில் ரூ.3000 கோடி மதிப்பிலான ஓவியத்தின் மீது தக்காளி சூப்பை வீசிய இளம் பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட இருவரும் காலநிலை ஆர்வலர்கள், அவர்கள் மீது கிரிமினல் சேதக் குற்றங்கள் சுமத்தப்பட்டன.
லண்டனின் தேசிய ஓவியக் காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள உலகப் புகழ்பெற்ற ஓவியரான Vincent Van Gogh-வின் ஓவியமான "Sunflowers" மீது தக்காளி சூப்பை வீசி ஊற்றிய இரண்டு இளம் பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த ஓவியத்தின் மதிப்பு 84.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும். இலங்கை பணமதிப்பில் கிட்டத்தட்ட ரூ. 3000 கோடிகள்.
Just Stop Oil எனும் டீ-சர்ட்டை அணிந்த இரண்டு பெண்களும் Heinz தக்காளி டின்னைத் திறந்து அதிலுள்ள சூப்பை ஓவியத்தின் மீது வீசினர். இந்த சம்பவத்தின் வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவியது.
இருவரும் புதைபடிவ எரிபொருளுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட காலநிலை ஆர்வலர்கள் ஆவர்.
Credit: from Just Stop Oil
சம்பவத்தின்போது அங்கிருந்த வருகையாளர்கள் உடனே வெளியே அனுப்பப்பட்டு, உடனடியாக காவல்துறையினர் அழைக்கப்பட்ட நிலையில், 20 மற்றும் 21 அவயதுடைய இருவரும் கைது செய்யப்பட்டனர்.
"வான் கோவின் சூரியகாந்தி ஓவியத்தின் சட்டத்திற்கு கிரிமினல் சேதம்" செய்ததாக குற்றம் சாட்டப்பட்ட இருவரும் வெஸ்ட்மின்ஸ்டர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் பின்னர் ஆஜர்படுத்தப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர்.
ஓவியம் கண்ணாடி கொண்டு மூடப்பட்டிருந்ததால் நல்லவேளையாக அதில் எந்த சேதமில்லை. சட்டத்துக்கு (frame) மட்டுமே சேதம் ஏற்பட்டதாகக் காட்சியகம் தெரிவித்தது.
Van Gogh’s ‘Sunflowers’ painting was vandalized with tomato soup by two anti-fossil fuel protestors in London.
— Pop Crave (@PopCrave) October 14, 2022
The protestors then glued themselves to the wall beneath the painting.
As for damages, authorities say the painting is “unharmed.” pic.twitter.com/jqDNS939EB
பின்னர் ஆறு மணி நேரம் கழித்து ஓவியம் சுத்தம் செய்யப்பட்டு மீண்டும் மாட்டப்பட்டது.
மத்திய லண்டனில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற போராட்டங்கள் தொடர்பாக மொத்தம் 28 பேர் கைது செய்யப்பட்டனர். மேலதிக விசாரணைகள் நிலுவையில் உள்ள மற்ற 25 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.