லண்டன் விமான நிலையத்தில் பரபரப்பு! திடீரென வெளியேற்றப்பட்ட மக்கள்; ஒருவர் கைது
லண்டன் ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் சந்தேகத்திற்கிடமான ஒரு மூட்டை கிடப்பது தெரிவந்ததும் அங்கிருந்த மக்கள் அனைவரும் வெளியேற்றப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
சனிக்கிகிழ்மை மதியம் 1 மணியளவில் லண்டனில் உள்ள Stansted விமான நிலையத்தில் டெர்மினல் 1-ல் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர். மேலும் அங்கிருந்த சில கடைகளை மூடப்பட்டன. தொடர்ந்து, பொலிசார் அந்த மர்ம பொருளை அடையாளம் காண சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
Image: Harry Vogler
இது குறித்து Essex காவல்துறை கூறியதாவது,
"பாதுகாப்பு பகுதியில் சந்தேகத்திற்குரிய பேக்கேஜ் பற்றிய கவலைகளைத் தொடர்ந்து நாங்கள் தற்போது ஸ்டான்ஸ்டெட் விமான நிலையத்தில் இருக்கிறோம். சம்பவ இடத்தைச் சுற்றி தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.
விமான நிலையத்தின் அந்தப் பகுதியில் இருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான நிலைக்குக் கொண்டு வரப்பட்டுள்ளனர். அதனைத் தொடர்ந்து, இராணுவ வெடிகுண்டு நிபுணர்கள் அந்த பேக்கேஜை ஆய்வு செய்வார்கள்" என தெரிவித்தனர்.
விமான நிலையத்தில் இருந்த பயணி ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், ஒரு ட்யூட்டி ஃப்ரீ கடை மூடப்படும் காட்சிகளை வெளியிட்டுள்ளார்.
Stansted Airport has been partly evacuated. People asked to leave the stores leaving the shopping carts behind, and being closed in a hurry. What is going on please? @STN_Airport #stanstedairport pic.twitter.com/Y2fdmBzuoy
— Dr David de Lorenzo (@daviddelorenzo) October 30, 2021
ஆய்வு மேற்கொள்ளப்பட்டதையடுத்து, அந்த மர்ம பொருள் குறித்த தகவலை பொலிஸார் வெளியிடவில்லை. இருப்பினும், இந்த சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.