ஆண்களை தாக்கும் மார்பக புற்றுநோய்: அறிகுறிகள், பாதிப்புகள் என்னென்ன?
100-ல் ஒன்று என்ற விகிதத்தில் ஆண்களுக்கு மார்பக புற்றுநோய்.
ஒவ்வொரு ஆண்டும் சுமார் 350 ஆண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர்.
பெண்களுக்கு ஏற்படும் மார்பக புற்றுநோய் தற்போது 100-ல் ஒன்று என்ற கணக்கில் ஆண்களுக்கும் ஏற்படுவதாக பிரித்தானிய கேன்சர் ரிசர்ச் அமைப்பு தெரிவித்துள்ளது.
மார்பக புற்றுநோய் என்பது பொதுவாக பெண்களை மட்டுமே தாக்கும் நோயாக கருதப்பட்டு வரும் நிலையில், பிரித்தானியாவில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 350 ஆண்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Image: Miami University
இதுத் தொடர்பாக ப்ராக் புற்றுநோய் சிகிச்சை மையத்தின் கதிர்வீச்சு புற்றுநோயியல் நிபுணர் டாக்டர் அலெக்ஸாண்ட்ரா ஹாஸ் தெரிவித்துள்ள தகவலில், ஒவ்வொரு ஆண்டும் மார்பக புற்றுநோயால் நூற்றுக்கணக்கான பிரித்தானிய ஆண்கள் பாதிக்கபடுகின்றனர்.
துரதிர்ஷ்டவசமாக பல ஆண்கள் புற்றுநோயிற்கான அறிகுறிகளை கவனிக்க தவறுவதுடன், பெண்களை விட தாமதமாகவே நோய் அறிகுறிகளை ஆண்கள் கண்டறிந்து சிகிச்சை பெறுகிறார்கள் எனத் தெரிவித்துள்ளார்.
பெரும்பாலான புற்றுநோய்களை போலவே, முன்கூட்டியே கண்டறிதல் என்பது உயிர்காக்கும் மற்றும் நோயுடன் தொடர்புடைய எச்சரிக்கை அறிகுறிகளை நாம் அறிய உதவும் என்று டாக்டர் ஹாஸ் தெரிவித்துள்ளார்.
இவற்றில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் ஆண் மார்பக புற்றுநோய்க்கும், பெண்கள் மார்பக புற்றுநோய்க்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதைப்போல சில வேறுபாடுகளும் இருப்பதாக சுகாதார தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.
Image: Getty Images/iStockphoto
ஆண் மார்பக புற்றுநோய் அறிகுறிகள்:
NHS அறிக்கையின் படி, நோயின் சாத்தியமான ஆரம்ப எச்சரிக்கை அறிகுறிகள்,
- மார்பகத்தில் கட்டி - இவை பொதுவாக கடினமானது, வலியற்றது மற்றும் மார்பகத்திற்குள் நகராது
- முலைக்காம்பு உள்நோக்கி திரும்புதல்.
- முலைக்காம்பிலிருந்து திரவம் வெளியேறுதல்.
- முலைக்காம்பைச் சுற்றி புண் அல்லது அறிப்பு முலைக்காம்பு அல்லது சுற்றியுள்ள தோல் கடினமாக, சிவப்பு அல்லது வீக்கமாக மாறுதல்.
- அக்குளில் சிறிய புடைப்புகள் ஏற்படுதல்.
Image: Getty Images/iStockphoto
ஆண் மார்பக புற்றுநோயினால் ஏற்படும் பாதிப்புகள்:
- டெஸ்டிகுலர் காயம்.
- ஈஸ்ட்ராடியோலின் அளவு அதிகரிப்பு (ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன்)
- க்லைன்ஃபெல்டர் சிண்ட்ரோம் (சிறுவர்களும் ஆண்களும் கூடுதல் எக்ஸ் குரோமோசோமுடன் பிறக்கும்போது)
- சிரோசிஸ்
- புரோஸ்டேட் புற்றுநோய்
- மார்பு அதிர்ச்சி
- BRCA2 மரபணு மாற்றம் 2
ஆண் மார்பக புற்றுநோயைக் கண்டறிதல்:
- மார்பக புற்று நோய்க்கான பரிசோதனைகள் மற்றும் ஸ்கேன்கள் ஆகியற்றை கொண்டு கண்டறிதல்.
- மார்பக புற்றுநோய்க்கான தெளிவான குடும்ப வரலாறு இருந்தால் மரபணு நிபுணரிடம் மரபணு பரிசோதனை மேற்கொள்ளுதல்.
- மருத்துவரை சரியான நேரத்தில் அணுகுதல்.