பிரித்தானியாவில் இளம் பெண்ணுக்கு கிடைத்த நினைத்து பார்க்காத அதிர்ஷ்டம்! அதன் பின் அவர் செய்து வரும் ஆச்சரிய செயல்
பிரித்தானியாவில் லொட்டரி வெற்றிக்கு பின் பெண் ஒருவர், தன்னுடைய வேலைகளை விட்டுவிட்டு பேய்களை வேட்டையாடுவதில் கவனம் செலுத்தி வருவது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானியாவின் Nottinghamshire-ன் Hucknall-ஐ சேர்ந்த தம்பதி Laura(39) அமானுஷ்ய புலனாய்வாளர்-Kirk(37)( ஏரோநாட்டிகல் இன்ஜினியர் தற்போதும் பணியில் உள்ளார்).
கடந்த மார்ச் மாதம் 1-ஆம் திகதி நடந்த National Lottery Set For Life லொட்டரி Laura-வுக்கு அடுத்த 30 ஆண்டுகளுக்கு மாதம் 10,000 பவுண்ட் தொகையை பெறுவதற்கான பரிசு தொகை அதிர்ஷ்டமாக அடித்துள்ளது.
தற்போது Laura தனக்கு கிடைத்த வேலைகளை விட்டுவிட்டு, கணவரை உடன் அழைத்துக் கொண்டு, ஆவிகளை தேடுவது, அதாவது பேய்களை வேட்டையாடுவது வேலையை செய்து வருகிறார்.
இது குறித்து பிரபல ஆங்கில ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், Nottinghamshire-ஐ சேர்ந்த 39 வயது மதிக்கத்தக்க Laura Hoyle தன்னுடைய முழு நேர வேலையையும் விட்டுவிட்டு ஆவிகளை தேடும் பணியில் இறங்கியுள்ளார்.
இவர் National Lottery Set For Life லொட்டரி குலுக்கலில் விழுந்த பெரிய அதிர்ஷடத்திற்கு பின், முழு நேரமாக பேய்களை கண்காணிக்கும் வேலையில் இறங்கிவிட்டார்.
இந்த ஜோடி கடந்த சில ஆண்டுகளாகவே ஆவிகளை தேடுவது(பேய்களை வேட்டையாடுவது) போன்ற அமானுஷ்யம் நிறைந்த வீடியோக்களை தங்களுடைய யூ டியூப் சேனலில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், இவர்கள் லொட்டரி வெற்றிக்கு பின், பிரித்தானியாவில் பேய்கள் அதிகம் உள்ள பகுதிகளில் ஒன்றான நாட்டிங்ஹமில் உள்ள நீதி அருங்காட்சியகத்திற்கு இவர்கள் சென்றுள்ளனர்.
இது பிரித்தானியாவில் பேய்கள் அதிகம் உள்ள இடம் என்று தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் தேர்வு செய்யப்பட்டிருந்தது.
Laura-வின் கணவர் Kirk Stevens இது குறித்து கூறுகையில், நான் ஒருநாள் கூட இப்படி என் வாழ்க்கை செல்லும் என்று நினைத்து பார்த்தது கிடையது. ஆனால், நம் கனவு ஒரு நாள் நினைவாகும் போது, நாம் அது போன்ற நிகழ்வை அனுபவித்திருக்கமாட்டோம், அது போன்று தான் இப்போது எனக்கு உள்ளது.
நீங்கள் பேய்களை நம்புகிறீர்களோ, இல்லையோ இந்த அனுபவமே எங்களின் வெற்றி, இப்போது நாங்களை செய்துவிட்டோம் என்று கூறியுள்ளார்.
மேலும், Laura கூறுகையில், நாங்கள் இதில் நிறைய அனுபவித்துவிட்டோம் என்று குறிப்பிட்டுள்ளார்.