16,000 வீடுகளில் மின்தடை! அடுத்தடுத்து தாக்கிய புயல்களால் திணறிய பிரித்தானியா
பிரித்தானியாவை அடுத்தடுத்து தாக்கிய மாலிக் மற்றும் கோரி புயல்களால் 16000 வீடுகளில் மின்தடை ஏற்பட்டுள்ளது.
Met Office என்ற வானிலை நிறுவனம் பிரித்தானியாவை சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் புயல் தாக்கும் என தெரிவித்திருந்தது.
மேலும் அவற்றின் சிலப்பகுதிகளுக்கு அம்பர் புயல் எச்சரிக்கையும் விடுத்திருந்த நிலையில் வடக்கு இங்கிலாந்து மற்றும் ஸ்காட்லாந்தை பகுதிகளை புயல்கள் தாக்கியுள்ளது.
மாலிக் மற்றும் கோரி ஆகிய இரு புயல்கள் தாக்கியதில் வடக்கு இங்கிலாந்தில் 7000 வீடுகளிலும், ஸ்காட்லாந்தில் 9000 வீடுகளிலும் மின் இணைப்பு துடிக்கப்பட்டுள்ளது. மரங்கள் விழுந்ததில் சாலைகள் துண்டிக்கப்பட்டு போக்குவரத்துகள் பாதிப்பு அடைந்துள்ளது.
மேலும் மரம் சாய்ந்ததில், Staffordshire பகுதியை சேர்ந்த சிறுவனும், Aberdeen பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் மரம் சாய்ந்து உயிரிழந்துள்ளனர். திங்கள்கிழமை, Aberdeenshire உள்ள சில பள்ளிகள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. சில பள்ளிகள் தாமதமாக ஆரம்பம் ஆகும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் Staffordshire பகுதியை சேர்ந்த சிறுவனும்,Aberdeen பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணும் மரம் சாய்ந்து உயிரிழந்துள்ளனர்.
இது நமக்கு மிகவும் சவாலான காலம், புயலின் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது என முதல் மந்திரி John Swinney தெரிவித்துள்ளார்.
மாலிக் புயலால் பாதிக்கப்பட்ட 64000 பயனாளர்களுக்கு மீண்டும் மின் இணைப்பு வழங்கப்பட்டுவிட்டதாகவும், 1500 வீடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவிற்குள் மின் இணைப்பு வழங்க திட்டமிட்டு இருப்பதாகவும் ஸ்காட்லாந்து மின்வாரிய துறை தெரிவித்துள்ளது.