பிரித்தானியாவில் 45 கோடி ரூபாய் மதிப்பிலான தெருவிளக்குகளைத் திருடிய இளைஞர்
பிரித்தானியாவில் ஒரு மில்லியன் பவுண்டுகள் மதிப்பிலான தெருவிளக்குகளைத் திருடிய இளைஞர் நீதிமன்றத்தில் ஆஜர்.
பிரித்தானிய இளைஞர் ஒருவர் பிரித்தானியாவின் பல பகுதிகளில் தெருவிளக்குகளைத் திருடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார்.
45 கோடி ரூபாய் மதிப்பிலான தெருவிளக்குகள்
அவரது பெயர், ஜான் ஓ சலைவன் (20). சலைவன், பெட்ஃபோர்ட்ஷையர், கேம்பிரிட்ஜ்ஷையர், டர்ஹாம், தேம்ஸ் வேலி, எசெக்ஸ் மற்றும் ஹெர்ற்போர்ஃப்ஷையர் ஆகிய இடங்களிலிருந்து தெருவிளக்குகளைத் திருடியுள்ளார்.

அவர் திருடிய தெருவிளக்குகளின் மதிப்பு சுமார் ஒரு மில்லியன் பவுண்டுகள் ஆகும். ஒரு மில்லியன் பவுண்டுகள் என்பது இலங்கை மதிப்பில் 45,12,44,500.00 கோடி ரூபாய் ஆகும்.
சலைவன், தெருக்கள், கவுன்சில்கள், பள்ளிகள் மற்றும் தேவாலயங்களிலும் விளக்குகளைத் திருடிய நிலையில், அவர் திருடிய தெருவிளக்குகளில், புகழ் பெற்ற பழங்கால விளக்குகளும் அடங்கும்.
நேற்று சலைவன் Stevenage மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட நிலையில், இந்த குற்றச்சாட்டுகள் தான் கையாள்வதற்கு மிகவும் சீரியஸானவை என்று கூறிய நீதிபதி, வழக்கை Albans க்ரௌன் நீதிமன்றத்திற்கு பரிந்துரைத்துள்ளார்.
செப்டம்பர் மாதம் 2ஆம் திகதி, அங்கு வழக்கு விசாரணை துவங்க உள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |