சுற்றுலா சென்ற இந்திய இளம்பெண்ணை சீரழித்த பிரித்தானியர் கைது
அந்தமான் தீவுகளுக்கு சுற்றுலா சென்றிருந்த இந்திய இளம்பெண் ஒருவரை துஷ்பிரயோகம் செய்த பிரித்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பிரித்தானியர் கைது
சென்ற மாத இறுதியில், இந்தியாவின் பெங்களூருவைச் சேர்ந்த இளம்பெண்ணொருவர், நண்பர் ஒருவருடன் அந்தமான் தீவுகளுக்கு சுற்றுலா சென்றுள்ளார்.
அங்கு பிரித்தானியர் ஒருவரை அவர் சந்தித்துள்ளார். இருவருமாக வெளியே சென்ற நிலையில், அந்த பிரித்தானியர் அந்த இந்திய இளம்பெண்ணின் குளிர்பானத்தில் போதைப்பொருள் எதையோ கலந்துள்ளார்.
பின்னர் அந்த இளம்பெண் கண் விழிக்கும்போது, தான் துஷ்பிரயோகம் செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
உடனடியாக வீடு திரும்பிய அவர் பெற்றோரிடம் நடந்ததைக் கூற, அவர்கள் பொலிசாரிடம் புகாரளித்துள்ளனர்.
அதைத் தொடர்ந்து, அந்த பிரித்தானியர் கைது செய்யப்பட்டுள்ளார். 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் அவர் அடைக்கப்பட்டுள்ளார்.
சம்பந்தப்பட்டவர்கள் பெயர்கள் எதுவும் தற்போதைக்கு வெளியிடப்படவில்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |