பிரித்தானியாவில் நாய் தாக்கி மேலும் ஒருவர் உயிரிழப்பு: சம்பவ இடத்தில் பொலிஸார் எடுத்த உடனடி முடிவு
பிரித்தானியாவில் XL புல்லி ரக நாய் தாக்கியதில் உயிரிழந்த நபரின் பெயர் விவரங்களை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.
ஆண் ஒருவரை தாக்கிய XL புல்லி
பிரித்தானியாவில் சுந்தர்லாந்து பகுதியில் நாய் தாக்கியதில் காயமடைந்து பின்னர் உயிரிழந்த நபரின் விவரங்களை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
54 வயதுடைய இயன் லாங்லி (Ian Langley) என்ற நபர் XL புல்லி ரக நாய் தாக்கியதில் உயிரிழந்தாக நம்பப்படுகிறார்.
இயன் லாங்லியை தாக்கிய XL புல்லி ரக நாயை பொலிஸார் சம்பவ இடத்திலேயே சுட்டுக் கொன்றுள்ளனர்.
SkyNews
மேலும் இயன் லாங்லி உயிரிழப்பு குறித்து நார்த்ம்ப்ரியா பொலிஸார் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
2 லட்சம் ரூபாய்க்கு ஆசைப்பட்டு…ஆபிஸ் விருந்தில் 1 லிட்டர் மதுபானத்தை குடித்த ஊழியர் பலி: பின்னணி விவரம்
நபர் ஒருவர் கைது
முதலில் இயன் லாங்லியை காயப்படுத்தியதற்காக 44 வயதுடைய நபரை சந்தேகத்தின் அடிப்படையில் முதலில் பொலிஸார் கைது செய்து இருந்தனர்.
Sky news
ஆனால் இயன் லாங்லி உயிரிழந்ததை தொடர்ந்து அதே நபரை கொலை சந்தேகத்தின் பெயரில் பொலிஸார் மீண்டும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அத்துடன் அவரது வீட்டில் இருந்த மற்றொரு XL புல்லி நாயை பொலிஸார் முன்னெச்சரிக்கையாக கைப்பற்றினர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |