வீட்டு வாடகையை உயர்த்துவதாக கூறியதால் பிரித்தானியர் செய்த பயங்கர செயல்
இங்கிலாந்தில் வாழ்ந்துவந்த பிரித்தானியர் ஒருவர், தன் வீட்டு வாடகை உயர்த்தப்படப்போவதாக தெரியவந்ததால் வீட்டையே வெடிக்கச் செய்யப்போவதாக தன் நண்பர்களிடம் கூறியுள்ளார்.
பிரித்தானியர் செய்த பயங்கர செயல்
இங்கிலாந்திலுள்ள நாட்டிங்காம்ஷையரில் வாழ்ந்துவந்த டேவிடுக்கு (David Howard, 53), தான் வசித்து வந்த வீட்டின் வாடகை 80 பவுண்டுகள் அதிகரிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது.

அதனால் கோபமடைந்த அவர், தன் வீட்டையே வெடிக்கச் செய்துவிடுவதாக தன் நண்பர்களிடம் கூறியுள்ளார்.
கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 12ஆம் திகதி, மாலை 3.30 மணியளவில் தன் நண்பர் ஒருவரை தொலைபேசியில் அழைத்த டேவிட், எரிவாயுக் குழாயை பிடுங்கிவிட்டேன், வீடு டமால் என்ற சத்தத்துடன் வெடிக்கப்போகிறது என்று கூறியுள்ளார்.
அவர் சொன்னதுபோலவே, அவர் வசித்த வீடு வெடித்துச் சிதறியுள்ளது. அவரது வீடு முற்றிலுமாக சேதமடைந்ததுடன், அருகிலிருந்த வீடுகளும் சேதமடைந்துள்ளன.

அவசர உதவிக்குழுவினர் வந்து வீட்டின் இடிபாடுகளை அகற்றியபோது, டேவிடும் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்திருந்தது தெரியவந்தது.
அந்த பயங்கர சம்பவம் தொடர்பாக நீதிமன்ற அதிகாரி ஒருவர் விசாரணை மேற்கொண்டுவந்த நிலையில், டேவிட் எரிவாயுக்குழாயை பிடுங்கியதால் வீட்டில் எரிவாயு சூழந்த நிலையில், ஃப்ரிட்ஜில் ஏற்பட்ட மின் பொறி ஒன்றால் வீடு தீப்பீடித்திருக்கலாம் என தற்போது கூறப்பட்டுள்ளது.
வீடு வெடித்துச் சிதறியதில் டேவிட் இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த நிலையில், அவர் புகையால் மூச்சுத்திணறி உயிரிழந்ததாக உடற்கூறு ஆய்விலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |