பிரித்தானியாவில் பூங்கா ஒன்றில் சடலமாக கிடந்த ஆண்: 2 பேர் மீது பாய்ந்த கொலை குற்றச்சாட்டு
பிரித்தானியாவில் பூங்கா ஒன்றில் ஆண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேர் கொலை குற்றச்சாட்டை எதிர்கொள்கின்றனர்.
பூங்காவில் கண்டெடுக்கப்பட்ட சடலம்
பிரித்தானியாவின் Gateshead பகுதியில் உள்ள பூங்காவில் ஆண் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டது.
ஞாயிற்றுக்கிழமை காலை 6.10 மணியளவில் Shipcote Lane-இல் உள்ள புல்வெளி பகுதிக்கு அதிகாரிகள் அழைக்கப்பட்டனர்.
இதையடுத்து அங்கு 54 வயதுடைய நீல் செல்கிர்க்(Neil Selkirk) என்ற ஆண் ஒருவர் காயங்களுடன் கொலை செய்யப்பட்டு கிடப்பதை கண்டுபிடித்தனர்.
இருவர் கைது
இந்நிலையில் சம்பவ இடத்திற்கு அருகில் 39 மற்றும் 33 வயதுடைய இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்கள் மீது கொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு இன்று South Tyneside மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பேசிய நார்தம்ப்ரியா காவல் துறையின் துப்பறியும் ஆய்வாளர் கிறிஸ் டெவின், உயிரிழந்த நீல் செல்கிர்க் குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொண்டார்.
அத்துடன் நடைபெற்று வரும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்கி வரும் பொதுமக்களுக்கு நன்றியையும் தெரிவித்துக் கொண்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |