சுயசரிதையில் தாத்தா எழுதியிருந்த வார்த்தைகள்! தமிழகத்திற்கு ஓடோடி வந்த பிரித்தானியர்.. நெகிழ்ச்சி பின்னணி
பிரித்தானியாவில் இருந்து தமிழகம் வந்து தனது தாத்தா ரசித்த இடத்தை பேரன் தேடி சென்ற நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டைபாய்டுக்கு சிகிச்சை
தமிழகத்தில் உள்ள குன்னூரில் வெலிங்டனில் ராணுவ மருத்துவமனை உள்ளது. ஆங்கிலேயர் ஆட்சியின்போது, முதலாம் உலகப் போரில் பங்கேற்ற பிரித்தானியாவை சேர்ந்த ராணுவ அதிகாரியாக இருந்த ஸ்டான்லி குட்லேண்ட் இந்த மருத்துவமனையில் தான் தனக்கு ஏற்பட்ட டைபாய்டுக்கு சிகிச்சை பெற்றார்.
அவர் எழுதிய சுயசரிதையில் வெலிங்டன் குறித்து சிலாகித்திருந்தார், அதன்படி வெலிங்டன் தனக்கு மிகவும் பிடித்தமான அழகிய இடம் என குறிப்பிட்டுள்ளார்.
நீண்ட நாள் கனவு
இதையடுத்து ஸ்டான்லியின் பேரன் ஆண்ட்ரூ குட்லேண்ட் (63) தனது தாத்தா ரசித்த இடத்தை நேரில் பார்க்க வேண்டும் என்ற நீண்ட நாள் கனவில் இருந்தார். அதன்படி நேற்று தனது நண்பர் கிறிஸ்டோபர் என்பவருடன் குன்னுார் வந்து அனைத்து இடங்களையும் ரசித்து பார்த்தார்.
ஆண்ட்ரூ பேசுகையில், குன்னுார் மிகவும் அழகாக உள்ளது. மக்களின் மனமும் அதை விட சிறப்பு என கூறினார்.