26 ஆண்டுகள் அழுக்கு கூடாரத்தில் அடிமையாக்கப்பட்ட பிரித்தானியர்: அவருக்கு கிடைத்துள்ள இழப்பீடு!
26 ஆண்டுகளாக அழுக்கு கூடாரத்தில் அடைத்து வைக்கப்பட்டு இருந்த பிரித்தானியர் ஒருவருக்கு சுமார் ரூ.3.75 கோடி இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
நவீன அடிமைத்தனம்
பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 26 ஆண்டுகளாக மனிதர் ஒருவர் கொடூரமான நவீன அடிமைத்தன கொடுமைகளை அனுபவித்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
அடையாளம் காணப்பட்ட 'பாதிக்கப்பட்டவர் A' என்ற அந்த நபர், லின்கன்ஷயரில்(Lincolnshire) ரூனி என்ற குடும்பத்தால்(The Rooney family) பிடித்து வைக்கப்பட்டு கொடூரமாக துன்புறுத்தப்பட்டுள்ளார்.
பாதிக்கப்பட்டவர் கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாக அழுக்கு நிறைந்த கூடாரங்களில் அடைத்து வைக்கப்பட்டு கொடுமைப்படுத்தப்பட்டுள்ளார்.
இவ்வாறு அடைத்து வைக்கப்பட்டவர்களில் 15 பேர் கொடூரமாக கொல்லப்பட்டதாகவும் தகவல் தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக 2017 ஆம் ஆண்டில், 11 குடும்ப உறுப்பினர்கள் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டு மொத்தம் 79 ஆண்டுகள் அவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.
நஷ்ட ஈடு
இந்நிலையில் 'பாதிக்கப்பட்டவர் A' க்கு நஷ்ட ஈடாக £352,000, அதாவது இந்திய ரூபாயில் சுமார் 3.75 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது.
'பாதிக்கப்பட்டவர் A' க்கு மீட்பு என்ற பாதை நீண்டதாகவும் கடினமானதாகவும் இருக்கும், ஆனால் இந்த இழப்பீடு அவரது வாழ்க்கையை மீட்டெடுப்பதற்கான முக்கியமான படியாகும்.
இந்த நிதி இழப்பீடு பாதிக்கப்பட்டவருக்கு பாதுகாப்பு மற்றும் ஆதரவை வழங்க முடியும் என்றாலும், அவர் அனுபவித்த உளவியல் ரீதியான காயங்களை அழிக்க முடியாது என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |