மெழுகுவர்த்தியை அணைத்து கின்னஸ் உலக சாதனை படைத்த பிரித்தானியர்: வைரல் வீடியோ
பிரித்தானியாவைச் சேர்ந்த ஒருவர் ஒரே நேரத்தில் 55 மெழுகுவர்த்திகளை அணைத்து கின்னஸ் உலக சாதனையை (GWR) படைத்துள்ளார்.
கின்னஸ் சாதனை
பிரித்தானியாவின் துடுர் பிலிப்ஸ் என்ற நபர் ஒரே நிமிட நேரத்தில் 55 மெழுகுவர்த்திகளை ஜம்ப் ஹீல் கிளிக் மூலம் ஊதி அணைத்து கின்னஸ் உலக சாதனையை படைத்துள்ளார்.
துடுர் பிலிப்ஸ்(Tudur Phillips) மார்ச் 1, 2020 அன்று பிரித்தானியாவின் ஸ்வான்சீயில் உள்ள தேசிய நீர்முனை அருங்காட்சியகத்தில் இந்த சாதனை படைத்துள்ளார். இதற்கிடையில் இந்த சாதனை வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
மேலும் இந்த வீடியோவை தங்களது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் கணக்கில் கின்னஸ் உலக சாதனை பகிர்ந்துள்ளனர். அந்த வீடியோவில் துடுர் பிலிப்ஸ் மெழுகுவர்த்தியின் மீது குதித்து தனது குதிகால் மூலம் அவற்றை ஊதுவதைக் காணலாம்.
2 மில்லியன் பார்வையாளர்கள்
தற்போது இந்த வீடியோ ட்விட்டரில் 2 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளையும் நூற்றுக்கணக்கான கருத்துகளையும் குவித்துள்ளது.
அவற்றில் ஒருவர், பயங்கரமான முயற்சி ஒன்றும் இல்லை, ஆனால் கொஞ்சம் பயிற்சி செய்தால் நிறைய பேர் இதைச் செய்ய முடியும் என்று நான் நினைக்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.