87 வயது மனைவியை கொலை செய்த பிரித்தானியர்
இங்கிலாந்தில், தன் 87 வயது மனைவியை கொலை செய்த 92 வயது பிரித்தானியர் கைது செய்யப்பட்டுள்ளார்.
87 வயது மனைவியை கொலை செய்த பிரித்தானியர்
இங்கிலாந்திலுள்ள Exeter என்னுமிடத்தில் வாழ்ந்துவரும் லாரன்ஸ் (Laurence Billam, 92), தன் மனைவியான ஷர்லியை (Shirley, 87) கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை 12.40 மணியளவில் பொலிசாரும் மருத்துவ உதவிக்குழுவினரும் லாரன்ஸ் வீட்டுக்கு விரைந்த நிலையில், ஷர்லியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
தன் மனைவியின் முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி அவரைக் கொன்ற லாரன்ஸ், தானும் குறிப்பிட்ட மாத்திரைகளை அதிக அளவில் எடுத்து தன் உயிரை மாய்த்துக்கொள்ள முயன்றதும் தெரியவந்துள்ளது.
எதனால் அவர் தன் மனைவியை கொலை செய்தார் என்பது தெரியவில்லை.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |