குளிர்சாதன பெட்டியில் 2 ஆண்டுகள் முதியவரின் உடலை ஒளித்து வைத்த நபர்: அதிர்ச்சியூட்டும் காரணம்
பிரித்தானியாவில் இறந்த முதியவரின் உடலை 2 ஆண்டுகள், குளிர்சாதனப்பெட்டியில் வைத்து பாதுகாத்த நபரது செயல் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இறந்து போன முதியவர்
பிரித்தானியாவின் பர்மிங்காமில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த 71 வயதான ஜான் வைன்ரைட்(71) என்பவர், கடந்த செப்டம்பர் 2018ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளார்.
@istock
ஆனால் அவரது உடல் கடந்த 2020ஆம் ஆண்டில் தான் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அதுவரை முதியவரின் உடல் அவரது வீட்டிலிருந்த குளிர்சாதன பெட்டியில் பதப்படுத்தப்பட்டுள்ளது.
@gettyimages
டாமியோன் ஜான்சன் என்பவர் தான் இக்கொடூர செயலை செய்திருக்கிறார். முதியவர் பெற்று வந்த அரசாங்க ஓய்வூதிய பணத்திற்காக அவர் இவ்வாறு செய்துள்ளார்.
ஓய்வூதிய பணம் திருட்டு
மேலும் ஜான்சன் முதியவரது வங்கி கணக்கை பயன்படுத்தி, அவரது ஓய்வூதிய பணத்தை இரண்டு ஆண்டு எடுத்து செலவு செய்துள்ளார்.
இந்நிலையில் இறந்தவரின் வங்கி கணக்கை தவறாக பயன்படுத்திய குற்றச் சாட்டும் அவர் மீது எழுந்துள்ளது. ஜான் வெயின்ரைட் எப்படி இறந்தார் என்பது பற்றி தற்போது வரை சரியான காரணங்கள் தெரியவில்லை.
@thestar
பொலிஸாரின் விசாரணையில் ஜான்சன் வங்கி கணக்கில், அவர் இரண்டு ஆண்டுகள் முதியவரது ஓய்வூதிய பணத்தை செலவு செய்தது அம்பலமாகியுள்ளது.
குற்றவாளிக்கு ஜாமீன்
குற்றவாளியான ஜான்சன் இவ்வாறு செய்யததற்கான காரணத்தை நீதிபதி கேட்டபோது, "அவர் நேர்மையற்ற முறையில் செயல்படவில்லை என்றும், அவர் வைன்ரைட்டின் பணத்திற்கு உரிமையுள்ளவர்” என்று ஜான்சன் தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து நீதிமன்றத்தில் குற்றவாளியான ஜான்சனுக்கு ஜாமீன் வழக்கப்பட்டுள்ளது. மேலும் வழக்கு தொடர்ந்து விசாரிக்கப்பட வேண்டுமென நீதிமன்றம் தெரிவித்துள்ளது.