பிரித்தானியாவில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு: 40 வயது மதிக்கத்தக்க நபர் படுகாயம்
Uk Man Shot by Police in Bristol investigation launched: பிரித்தானியாவில் காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு ஒருவர் காயமடைந்துள்ளார்.
காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூடு
பிரித்தானியாவின் பிரிஸ்டலின்(Bristol) ஈஸ்ட்வில்(Eastville) பகுதியில் உள்ள பிஷ்பாண்ட்ஸ் சாலையில் உள்ள வீடு ஒன்றில் துப்பாக்கிகள் இருப்பதாக பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் அவசர கால மீட்பு குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த ஆயுதம் ஏந்திய பொலிஸார் உடனடியாக தீவிர நடவடிக்கையில் களமிறங்கினர்.
அப்போது காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 40 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் குண்டு பாய்ந்து படுகாயமடைந்தார்.
காவல்துறையினரின் பேச்சுவார்த்தை குழு சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்பே இந்த துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
படுகாயமடைந்த நபருக்கு முதலுதவி சிகிச்சைகள் வழங்கப்பட்டு உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட போது குண்டு காயம் அடைந்த நபர் சுயநினைவுடனும், முச்சுப்பேச்சுடனும் இருந்ததாகவும், தற்போது உயிருக்கு ஆபத்து இல்லாத நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்தில் காவல்துறையினர் யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபரின் உறவினர்களை தொடர்பு கொள்ளும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.