பிரித்தானியாவில் 10 மாதங்களாக 72 வயது நபரின் உடலில் இருந்த கொரோனா! மீண்டது எப்படி? வெளியான முக்கிய தகவல்

Covid Coronavirus UnitedKingdom
By Kaviarasan Jun 24, 2021 03:29 PM GMT
Report

பிரித்தானியாவில் 72 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் கடந்த 10 மாதங்களாக தொடர்ந்து கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகின் பல்வேறு நாடுகளை கொரோனா வைரஸ் இன்று வரை அச்சுறுத்தி வருகிறது.

ஆரம்பத்தில் சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த வைரஸ், இப்போது பல்வேறு வடிவங்களில் தீவிரமாக பரவி வருகிறது. இதற்கு தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டாலும், இந்த வைரஸ் பரவலை இன்னும் நிரந்தரமாக கட்டுப்படுத்தவே முடியவில்லை.

பொதுவாக ஒருவருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டால், அதிகபட்சம் 15 முதல் 20 நாட்களில் குணமடைந்துவிடுவார்கள். ஆனால், பிரித்தானியாவில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட 72 வயது நபர் ஒருவர் 10 மாதங்களாக கடும் அவதிக்குள்ளாகியுள்ளார்.

மேற்கு இங்கிலாந்தின் Bristol பகுதியைச் சேர்ந்தவர் Dave Smith. 43 வயது மதிக்கத்தக்க இவர் ஓய்வு பெற்ற டிரைவிங் ஆசிரியர் ஆவார். நுரையீரல் பாதிப்பில் இருந்து மீண்ட இவருக்குக் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதலில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது.

இதனால், இவர் அனைவரையும் போலவே தனக்கு ஓரிரு வாரங்களில் கொரோனா பாதிப்பு சரியாகிவிடும் என்றே நினைத்துள்ளார். ஆனால், அவருக்கு கொரோனா பாதிப்பு சரியாகவில்லை.

பிரித்தானியாவில் 10 மாதங்களாக 72 வயது நபரின் உடலில் இருந்த கொரோனா! மீண்டது எப்படி? வெளியான முக்கிய தகவல் | Uk Man Tested Covid Positive For 10 Months

சுமார் 300 நாட்களுக்கு மேலாக அவருக்கு கொரோனா பாதிப்பு இருந்துள்ளது. இந்த காலகட்டத்தில் 43 முறை அவர் கொரோனா பரிசோதனை செய்துள்ளார். அனைத்து சோதனைகளிலும் அவருக்கு கொரோனா பாசிட்டிவ் என்றே முடிவுகள் வந்துள்ளது.

இது குறித்து அவர் கூறுகையில், இந்த கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, நான் கடுமையான மனரீதியாக பாதிக்கபப்ட்டதாகவும், இதன் காரண்மாகவே தான் வேலையில் இருந்து விருப்ப ஓய்வு பெற்றுவிட்டதாகவும் வேதனையுடன் கூறியுள்ளார்.

மேலும், நான் என் இறுதிச்சடங்கிற்கான அனைத்து ஏற்பாட்டை கூட செய்ததாக குறிப்பிட்டார். Bristol பல்கலைக்கழகத்தின் தொற்றுநோய் ஆலோசகரான Ed Moran இது குறித்து கூறுகையில், கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த 300 நாட்களும் அவரது உடலில் வைரஸ் ஆக்டிவாகவே இருந்தது.


வழக்கமாக ஒருவர் கொரோனாவில் இருந்து குணமடைந்த பின்னரும், அவர்களின் உடலில் சில வாரங்கள் வரை கொரோனா வைரஸ் இருக்கும். ஆனால் அது ஆக்டிவாக இருக்காது.

அதேநேரம் இவரது உடலில் இருந்த வைரஸ் முழுவதுமாக ஆக்டிவாகவே இருந்தது. இதையடுத்து அமெரிக்காவின் பயோடெக் நிறுவனமான ரெஜெனெரான் உருவாக்கிய செயற்கை ஆன்டிபாடிகளின் காக்டெய்ல் அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

பிரித்தானியாவில் இந்த வகை சிகிச்சைக்குத் தடை உள்ளபோதும், இவரது நிலையைப் பரிசீலனை செய்து சிறப்பு அனுமதி அளிக்கப்பட்டது. இந்தச் சிகிச்சைக்குப் பின்னரே அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளார்.

சரியாக 305 நாட்களுக்குப் பின், அவர் கொரோனாவில் இருந்து குணமடைந்ததாக கூறினார். இயற்கையாக வலுவான ஆன்டிபாடிகளை உற்பத்தி செய்ய முடியாத உடல்களில் இதுபோல கொரோனா நீண்ட காலம் இருக்கலாம் என ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்த நபர் தான் உலகிலேயே அதிக நாட்கள் கொரோனா வைரஸ் பாதிப்பு இருந்துள்ளது. இதற்கான காரணங்கள் தெளிவாகத் தெரியவில்லை என்றும் இது குறித்து ஆய்வுகளை நடத்தி வருவதாகவும் கூறப்பட்டுள்ளது. 

மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US