பிரித்தானியாவில் அபராத ரசீதை பெண் அதிகாரி மீது வீசிய நபர்: ரூ.3 லட்சம் அபராதம் விதித்த நீதிமன்றம்
UK Man throws fine notice to female officers court imposes 3 lakh fine: பிரித்தானியாவில் காரில் ஒட்டப்பட்ட ரசீதை பெண் அதிகாரி மீது தூக்கி வீசிய நபருக்கு ரூ.3 லட்சம் வரை நீதிமன்றம் அபராதம் விதித்துள்ளது.
ரசீதை பெண் அதிகாரி மீது வீசிய நபருக்கு அபராதம்
பிரித்தானியாவில் 58 வயது ஸ்டீபன் லாங் என்ற நபர் தன்னுடைய காரை பார்க்கிங் இல்லாத பகுதியில் நிறுத்தியதை அடுத்து, பெண் அதிகாரி ஒருவர் அதற்கான அபராத ரசீதை ஸ்டீபன் லாங்கின் கார் கண்ணாடியில் ஓட்டியுள்ளார்.
பெண் அதிகாரியின் இந்த செயலை பொறுத்துக் கொள்ள முடியாமல் ஆத்திரமடைந்த லாங், கண்ணாடி மீது ஒட்டப்பட்ட ரசீதை கிழித்து அந்த பெண் அதிகாரி மீது வீசியுள்ளார்.

இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவி காட்சிகளில் பதிவாகி இருந்த நிலையில், பணியில் இருந்த அதிகாரியிடம் ஆக்ரோஷமாக நடந்த கொண்டதாக ட்ரூரோ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையில் ஸ்டீபன் லாங் ஆஜராகாததை தொடர்ந்து அவர் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
அத்துடன் இந்த குற்றத்திற்கான அபராதமாக லாங் சுமார் 2.43 லட்சம் அபராதகமாக செலுத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் கூடுதல் கட்டணமாக ரூபாய் 12,963 செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.