வாயிலிருந்து ரத்தம் ஊற்ற வீடியோ வெளியிட்ட காதலி., பிரபல பிரித்தானிய கால்பந்தாட்டக்காரர் கைது!
மான்செஸ்டர் யுனைடெட் அணியைச் சேர்ந்த பிரித்தனைய கால்பந்தாட்டக்காரர் மேசன் கிரீன்வுட் (Mason Greenwood) கற்பழிப்பு மற்றும் தாக்குதல் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
20 வயதாகும் மேசன் கிரீன்வுட்டின், காதலியும் மொடல் அழகியான Harriet Robson, இன்று காலை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தொடர்ச்சியாக சில புகைப்படங்களையும், விடீயோவையும் மற்றும் ஒரு ஆடியோ பதிவையும் வெளியிட்டிருந்தார்.
அந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோவில், ஹாரீட் ராப்சன் தனது வாய் உடைந்து, உதடுகள் கிழிந்து ரத்தம் வழிந்தவாறு காணப்பட்டார்.
மேலும், அவருடன் முழுவதும் பல இடங்களில் கடுமையாக தாக்கப்பட்டு ரத்தக்கட்டுக்களுடன் காணப்பட்டார்.
தன்னுடன் உடலுறவு கொள்ளும்படி, தனது காதலன் மேசன் கிரீன்வுட் இவ்வாறு கொடூரமாக தாக்கியதாக அவர் குற்றம் சாட்டினார்.
மேலும், தான் விருப்பப்படும்படி தன்னுடன் உடலுறவு வைத்துக்கொள் என மேசன் தன்னை மிரட்டுவது போன்ற ஒரு உரையாடலையும் ஆடியோவாக வர வெளியிட்டிருந்தார்.
இந்த பதிவுகள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது பெரும் சர்ச்சையாக வெடிக்க, மான்செஸ்டர் யுனைடெட் அணி அவரை இடைநீக்கம் செய்தது.
புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களுடன் சமூக ஊடகங்களில் கூறப்பட்ட குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, மேசன் கிரீன்வுட்டின் வீட்டிற்கு சென்ற மான்செஸ்டர் பொலிஸார் அவரை தற்போது கைது செய்துள்ளது.
விசாரணைகள் தொடர்ந்து வரும் நிலையில் அவர் கற்பழிப்பு மற்றும் தாக்குதலுக்கு சந்தேகத்தின் பேரில் பொலிஸ் காவலில் உள்ளார்.