பிரித்தானியாவில் கோடீஸ்வரர்கள் பயணிக்கும் சொகுசு விமானங்களை ஏக்கத்தோடு பார்த்து வந்தவருக்கு அடித்த அதிர்ஷ்டம்! என்ன தெரியுமா?
பிரித்தானியாவில் தனியார் சொகுசு விமானங்கள் இயக்கப்படும் விமான நிலையத்தில் பணிபுரியும் நபருக்கு லொட்டரியில் £1 மில்லியன் பரிசு விழுந்ததில் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளார்.
Doncaster-ஐ சேர்ந்தவர் Mark Plowright (47). இவர் மனைவி Sara. Mark, Sheffield விமான நிலையத்தில் சிறிய வேலையில் இருந்தார்.
பிரபலங்கள், கோடீஸ்வரர்கள் பயணிக்கும் சொகுசு விமானங்கள் தொடர்பான பணியை அவர் செய்து வந்தார்.
இந்த நிலையில் Mark - Sara தம்பதிக்கு லொட்டரியில் £1 மில்லியன் பரிசு விழுந்துள்ளது. பலவிதமான சொகுசு விமானங்களை தினமும் ஏக்கத்தோடு அண்ணாந்து பார்த்த Mark தற்போது அது போன்ற விமானங்களில் பறக்கவுள்ளார்.
அவர் கூறுகையில், ஒவ்வொரு நாளும் ஆடம்பர விமானங்களுடன் பணிபுரிந்த பிறகு, ஒரு நீண்ட விமானத்தில் முதல் வகுப்பில் பறக்க வேண்டும் என்ற கனவு எனக்கு எப்போதும் இருந்தது.
தற்போது லொட்டரியில் விழுந்த பரிசு மூலம் கனவு நினைவாகவுள்ளது.
Fiji,Barbadosக்கு தனி சொகுசு விமானத்தில் நானும் என் மனைவியும் செல்லவுள்ளோம். பரிசு பணத்தில் முதலில் ஆடம்பரமான குளியல் தொட்டி வாங்கியுள்ளோம்.
£5 சுரண்டல் லொட்டரியில் தான் எனக்கு இந்த பெரும் பரிசு விழுந்தது என கூறியுள்ளார்.
