வீட்டில் விசித்திரமாக அங்குமிங்கும் சுற்றி திரிந்த பூனை! தூங்கி எழுந்த பிரித்தானியருக்கு காத்திருந்த அதிர்ச்சி
பிரித்தானியாவில் ஆடையின்றி படுக்கையில் படுத்திருந்த நபர் தூங்கி எழுந்த போது அவருக்கு பெரிய அதிர்ச்சி காத்திருந்தது. ஏனெனில் 3 அடி நீளமுள்ள albino corn வகை பாம்பு Iain Robertson என்பவரின் கால்களை சுற்றி மெத்தைக்கு அருகே இருந்திருக்கிறது.
இதை பார்த்து பதறிய Robertson படுக்கையை அப்படியே தூக்கி கீழே போட்டிருக்கிறார். நல்லவேளையாக albino corn வகை பாம்பு விஷம் கொண்டது கிடையாது.
பின்னர் Robertson மற்றும் அவர் மனைவி சேர்ந்து அந்த பாம்பை லாவகமாக பிடித்து பிளாஸ்டிக் பெட்டியில் அடைத்தனர். பக்கத்து வீடுகளில் இருந்து அந்த பாம்பு அவர்கள் வீட்டிற்கு வந்திருக்கும் என Norfolkல் வசிக்கும் தம்பதி நம்புகின்றனர்.
thesun
அந்த பாம்பு Wild Touch rescue centreல் கொண்டு விடப்பட்டது. Robertson மற்றும் அவர் மனைவி Candi கூறுகையில், சில நாட்களுக்கு முன்னரே படுக்கையறைக்குள் பாம்பு வந்துவிட்டதாக நினைக்கிறோம்.
ஏனெனில் எங்கள் வீட்டில் உள்ள பூனை சில நாட்களாகவே விசித்திரமாக நடந்து கொண்டது, அதற்கு முன்னரே பாம்பு இருப்பது தெரிந்திருக்கிறது. நல்லவேளையாக இந்த சம்பவத்தால் யாருக்கும் எந்தவொரு பிரச்சனையும் பெரிதாக ஏற்படவில்லை என கூறியுள்ளனர்.
thesun