லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் வென்ற பிரித்தானியர்: ஒரு துயரச் செய்தி
லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் வென்ற பிரித்தானியர் ஒருவர் திடீரென மரணம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் வென்ற பிரித்தானியர்
2020ஆம் ஆண்டு, வட அயர்லாந்தைச் சேர்ந்த ஷான் கீலி என்பவருக்கு லொட்டரியில் ஒரு மில்லியன் பவுண்டுகள் பரிசு விழுந்தது. அப்போது அவருக்கு 26 வயது.

இந்நிலையில், ஷான், இம்மாதம், அதாவது மே மாதம் 23ஆம் திகதி, திடீரென மரணம் அடைந்ததாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இப்போது அவருக்கு வயது 32. ஷான் எப்படி உயிரிழந்தார் என்பது தெரியவில்லை என்றாலும், அமைதியாக அவரது உயிர் பிரிந்ததாக இறுதிச்சடங்கு மைய இயக்குநர்கள் தெரிவித்துள்ளார்கள்.

வட அயர்லாந்தைச் சேர்ந்த ஷான் சமீப காலமாக பிலிப்பைன்ஸ் நாட்டில் வாழ்ந்துவந்துள்ளார். அங்குதான் அவர் மரணமடைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |