பிரித்தானிய பெண்ணிற்கும் இந்திய இளைஞருக்கும் காதல்! சிவன் கோவிலில் நடைபெற்ற திருமண புகைப்படங்கள்
பிரித்தானிய பெண்ணிற்கும் இந்திய இளைஞருக்கும் நடைபெற்ற காதல் திருமணம்.
பாரம்பரிய திருமண சடங்குகளை மிகவும் விரும்பி செய்த மணப்பெண்.
பிரித்தானிய பெண்ணொருவர் இந்தியாவில் உள்ள தனது காதலரை கரம் பிடிக்க விமானத்தில் பறந்து வந்த நிலையில் தம்பதிக்கு வேத மந்திரங்கள் ஓத பாரம்பரிய முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது.
பிரித்தானியாவின் மான்செஸ்டரை சேர்ந்தவர் ஹன்னா ஹொவித் (28). செவிலியரான இவருக்கு இந்தியாவின் ஆக்ராவை சேர்ந்த பலிந்திரா சிங் (28) என்பவருடன் 2020 கொரோனா லாக் டவுனின் போது நட்பு ஏற்பட்டு பின்னர் காதலாக மாறியது.
கிட்டத்தட்ட மூன்றாண்டுகளாக இருவரும் காதலித்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் ஆக்ராவில் உள்ள நக்லா கிராமத்தில் அமைந்திருக்கும் சிவன் கோவிலில் ஹன்னா - பலிந்திரா திருமணம் நடைபெற்றது.
timesofindia
மணமகள் பாரம்பரிய உடையை அணிந்திருந்தார், இதையடுத்து மந்திரங்கள் ஓத திருமணம் நடைபெற்றது. திருமண சடங்குகளை ஹன்னா மிகுந்த ஆர்வமுடன் செய்ததை காண முடிந்தது.
இந்த திருமணத்தில் குடும்பத்தார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
timesofindia