வேலை பெறுதல் தொடர்பில் பிரித்தானியாவில் புதிய சட்டம் அறிமுகம்
பிரித்தானியா தொடர்ந்து சட்டவிரோத புலம்பெயர்தலைக் கட்டுப்படுத்த விரும்புவதாகக் கூறிவருகிறது.
ஆனால், உண்மையில், சட்டப்படி பிரித்தானியாவுக்கு வருபவர்கள் மீதும் கடினமான கட்டுப்பாடுகளை விதித்தவண்ணம் உள்ளது பிரித்தானியா.
ஆங்கிலப்புலமை இல்லாவிட்டால்...
அவ்வகையில், பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், ஆங்கிலப்புலமை இல்லாவிட்டால் வேலை செய்யமுடியாதவகையில் சட்டம் ஒன்று, நேற்று, அதாவது, அக்டோபர் மாதம் 14ஆம் திகதி, அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
ஆம், இனி பிரித்தானியாவில் வேலை செய்ய விரும்பும் புலம்பெயர்ந்தோர், Secure English Language Test (SELT) என்னும் தேர்வை எழுதி வெற்றி பெறவேண்டும்.
சில குறிப்பிட்ட சட்டப்படியான வழிமுறைகள் மூலம் விண்ணப்பிக்கும் புலம்பெயர்ந்தோர், பேசுதல், கவனித்தல், வாசித்தல் மற்றும் எழுதுதலில், A மட்டத்தில் ஆங்கிலப்புலமை கொண்டவர்களாக இருக்கவேண்டும்.
இந்த புதிய விதி, 2026ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 8ஆம் திகதி அமுலுக்கு வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |