பிரித்தானியாவில் 19-ஆம் திகதிக்கு பிறகும் முகக்கவசம் அணிய வேண்டுமா? அமைச்சர் சொல்வது என்ன?
ஜுலே 19-ஆம் திகதிக்கு பிறகு முகக்கவசம் அணிவதும் அணியாததும் அவரது தனிப்பட்ட விருப்பமாக இருக்கும் என பிரித்தானிய அமைச்சர் தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் ஊரடங்கு விதிமுறைகள் மற்றும் கொரோனா கட்டுப்பாடுகள் ஜுலே 19-ஆம் திகதியுடன் முடிவுக்கு வரும் என அரசு நம்பிக்கை அளித்துள்ளது.
அதன்பிறகு, பிரித்தானிய மக்கள் தங்கள் பாதுகாப்பிற்காக சுய கட்டுப்பாடுடன் இருப்பது அவர்களது தனிப்பட்ட பொறுப்பு என்றும், முகக்கவசம் அணிவதும், சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதும் அவரர் விருப்பம் என்றும் வீட்டுவசதி செயலாளர் ராபர்ட் ஜென்ரிக் தெரிவித்துள்ளார்.
ஜூலை 19-க்கு பிறகு "அரசே அனுமதிக்கும் பட்சத்தில், தனிப்பட்டமுறையில் நானே முகக்கவசம் அணிவதை விரும்பமாட்டேன், என்னைப்போலவே பலரும் அதனை விரும்பமாட்டார்கள்" என்று அவர் கூறினார்.
இருப்பினும், வரும் நாட்களில் கட்டுப்பாடுகளை நீக்குவது குறித்து பிரதமர் போரிஸ் ஜான்சன் இன்னும் விரிவாக அறிவிப்பார் என ராபர்ட் கூறினார்.