உதவியாளருடன் கையும் களவுமாக சிக்கிய பிரித்தானிய சுகாதாரச் செயலர்: தற்போதைய நிலைமை
உலகமே கொரோனாவுக்கு பயந்து வீடுகளுக்குள் பதுங்கியிருந்த நிலையில், மக்களை இடைவெளி விட்டு வாழ அறிவுறுத்திவிட்டு, தான் தனது ரகசிய காதலியை இறுக அணைத்து முத்தமிட்டுக்கொண்டிருந்தபோது கையும் களவுமாக சிக்கினார் பிரித்தானிய சுகாதாரச் செயலர்.
இப்போது அவர் என்ன செய்கிறார்?
பிரித்தானிய உள்துறைச் செயலரான மேட் ஹான்காக் (Matt Hancock), தனது உதவியாளரான ஜினாவை (Gina Coladangelo) கட்டியணைத்து முத்தமிடும் CCTV கமெரா காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.

மக்கள் இடைவெளி விட்டு வாழவேண்டும் என கட்டுப்பாடுகள் விதித்துவிட்டு, தான் விதித்த கட்டுப்பாடுகளை தானே பின்பற்றாததால் எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து பதவி விலகினார் ஹான்காக்.
பொதுவாக இப்படி சர்ச்சையில் சிக்குவோர் அதிகம் வெளியில் தலைகாட்ட விரும்பமாட்டார்கள். ஆனால், ஹான்காக்கோ அப்படியில்லை. பல ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு பெரும் தொகை வருவாய் ஈட்டிவிட்டார் அவர்.

அத்துடன், புத்ககம் எழுதுவது, போன்ற விடயங்கள் மூலமாகவும் வருவாய் பார்த்துக்கொண்டிருக்கிறார் ஹான்காக்.
மேலும், தங்கள் குடும்ப நிறுவனம் ஒன்றில் நிர்வாக இயக்குநராகவும் பொறுப்பு வகிக்கிறார் அவர்.
தன் மனைவியை விவாகரத்து செய்துவிட்டு, காதலியான ஜினாவுடன் லண்டனில் வாழ்ந்துவருகிறார் ஹான்காக்.
இருவருமாக நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதும், பெரிய உணவகங்களில் உணவு உண்பதும், ஆடம்பர சுற்றுலாத்தலங்களை சுற்றிவருவதுமாக சந்தோஷமாக வாழ்ந்துவருகிறார்கள்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |