பயத்தால் தூக்கத்தில் தினம் கத்தும் சிறுமி! பிரித்தானியாவில் நடந்த அதிர்ச்சி சம்பவம்
பிரித்தானியாவில் நாய் கடித்ததில் 3 வயது சிறுமி படுகாயமடைந்து அதிலிருந்து மீண்டு வரும் நிலையில் நாயின் உரிமையாளருக்கு 10 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சிறுமியை கடித்த நாய்
Havantல் தான் இந்த சம்பவம் கடந்த ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி நடந்தது. அன்றைய தினம் 3 வயது சிறுமி ஒருவர் கடையில் இருந்து தனது வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். சிறுமியுடன் அவரின் பாட்டி, தாத்தாவும் இருந்தனர்.
அப்போது அருகே டாபர்மேன் நாய் உடன் El Chapo (45) என்ற பெண் சென்று கொண்டிருந்தார். அந்த சமயத்தில் நாயானது சிறுமி மீது பாய்ந்து பயங்கரமான தாக்குதல் நடத்தியது.
PA Wire/PA Images
நீதிமன்றம் தீர்ப்பு
இதையடுத்து படுகாயமடைந்த சிறுமிக்கு அறுவை சிகிச்சை உள்ளிட்ட பல சிகிச்சைகள் செய்யப்பட்டது. தற்போது வரையில் காயங்கள் மற்றும் தழும்புகளால் அவர் அவதிப்படுகிறார். மேலும் சிறுமியின் தாயார் நீதிமன்றத்தில் தெரிவிக்கையில், அந்த கொடூர சம்பவம் காரணமாக என் மகள் இன்னும் தூக்கத்தில் கத்துகிறார், அந்த அதிர்ச்சியில் இருந்து வெளியில் வரவில்லை என்றார்.
நாயின் உரிமையாளரான El Chapo மீது நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்ற நிலையில் அவருக்கு 10 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இதோடு 10 வருடங்கள் நாய்களை வைத்திருக்கவும் அவருக்கு தடை விதித்து Portsmouth Crown நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
PA Wire/PA Images