பிரித்தானியாவின் இளம் வயது இந்திய வம்சாவளி மேயர்: சில தகவல்கள்
Tushar Kumar, UK's youngest Indian-Origin mayor to attend NDTV world summit: பிரித்தானியாவின் இளம் வயது இந்திய வம்சாவளி மேயரான துஷார் குமார், இந்தியாவில் நடைபெறும் உச்சி மாநாடு ஒன்றில் கலந்துகொள்ள இருக்கிறார்.
பிரித்தானியாவில் இளம் வயதில் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட இந்திய வம்சாவளியினர் ஒருவர், இந்தியாவில் நடைபெறும் உச்சி மாநாடு ஒன்றில் பங்கேற்க உள்ளார்.
பிரித்தானியாவின் இளம் வயது இந்திய வம்சாவளி மேயர்
பிரித்தானியாவின் இளம் வயது இந்திய வம்சாவளி மேயர் என்னும் பெருமைக்குரிய அந்த நபரின் பெயர் துஷார் குமார் (23).

இந்தியாவின் ஹரியானா மாநிலத்தில் பிறந்த குமார், 10 வயதில் தன் குடும்பத்துடன் பிரித்தானியாவுக்கு குடிபெயர்ந்துள்ளார்.
லண்டன் கிங்ஸ் கல்லூரியில் அரசியல் அறிவியல் கற்ற குமார், 2023ஆம் ஆண்டு, படித்துக்கொண்டிருக்கும்போதே Hertsmere Borough கவுன்சிலின் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட்டுள்ளார்.
அந்த தேர்தலில் தோல்வியடைந்தாலும், மூன்று ஆண்டுகளுக்குப் பின், 2026ஆம் ஆண்டு, மே மாதம் 13ஆம் திகதி, Elstree and Borehamwood நகரின் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் குமார்.
இந்நிலையில், இந்தியாவின் தலைநகரான புதுடெல்லியில் நடைபெறும் NDTV உலக உச்சி மாநாட்டில், பல்வேறு தலைவர்களுடன் குமாரும் கலந்துகொள்ள இருக்கிறார்.
அந்த மாநாடு, இம்மாதம், அதாவது, அக்டோபர் மாதம் 22 மற்றும் 23ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.