இந்தியாவை எதிரி என விவரித்த பிரித்தானிய ஊடகம் - வெளிப்படும் ஐரோப்பாவின் இரட்டைமுகம்
இந்தியாவை பிரபல பிரித்தானிய ஊடகமொன்று 'எதிரி' என வெளியிட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
1 ஜூலை 2025 அன்று பிரித்தானியாவின் டெலிகிராப் (Telegraph) பத்திரிகையில் வெளியான ஓர் கட்டுரையில் இந்தியா “நண்பன் அல்ல, எதிரி” என குற்றம்சாட்டப்பட்டது.
காரணம்? ரஷ்யாவுடன் தொடரும் இந்தியாவின் எண்ணெய் மற்றும் பாதுகாப்பு உறவுகள்.
இந்தியா தனது பொருளாதாரத்தையும் மக்களையும் பாதுகாக்கும் வகையில் தள்ளுபடி விலையில் ரஷ்ய எண்ணெய் வாங்குவதை, மேற்கு நாடுகள் (பிரித்தானியா உட்பட) மன்னிக்க முடியாததாக எடுத்துக்கொண்டுள்ளன.
இந்தியாவின் வெளியுறவு கொள்கை என்பது நாட்டின் பாதுகாப்பின் அடிப்படையில் அமைந்தது என்று வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்ஷங்கர் தெளிவாகக் கூறியிருக்கிறார். யாரையும் திருப்திப்படுத்துவதற்காக இந்தியா தனது நலன்களை துறக்க முடியாது.
ஆனால் இதை விமர்சிக்கும் பிரித்தானியா, கடந்த பல ஆண்டுகளாக லண்டனை ரஷ்ய கருப்பு பணத்தின் தங்க குடிலாக மாற்றியுள்ளது.
Transparency International விபரப்படி, ரஷ்ய ஊழல் தொடர்புடைய 1.5 பில்லியன் பவுண்டு மதிப்பிலான சொத்துகள் லண்டனில் உள்ளன.
அதுபோல, விஜய் மால்யா, நிரவ் மோடி, சஞ்சய் பண்டாரி போன்ற இந்திய ஊழல்வாதிகள் பிரித்தானியாவில் வசிப்பதை ஏன் Telegraph பத்திரிகை கண்டிக்கவில்லை?
மேலும், யாராவது இந்தியா ரஷ்ய எண்ணெய் வாங்குவதை விமர்சிக்க முனைந்தால், முதலில் ஐரோப்பியர்கள் இந்தியாவில் சுத்திகரிக்கப்பட்ட ரஷ்ய எண்ணெயை தான் வாங்குகிறார்கள் என்பதை ஏற்க வேண்டும்.
இந்தியா, 2024-ல், ஈரோப்பாவின் மிகப்பாரிய சுத்திகரிக்கப்பட்ட எரிபொருள் வழங்குநராக மாறியுள்ளது. இது தான் உண்மை.
இந்தியா ரஷ்யாவுடன் பாதுகாப்பு உறவுகளை வளர்த்தது, மேற்கு நாடுகள் இந்தியாவுக்கு ஆயுதம் கொடுக்க மறுத்தபோதுதான். அதனால், INS Tamal போன்று ரஷ்யாவில் தயாரான போர் கப்பல் ஒரு திட்டத்தின் பகுதியே, நம்பிக்கையின் வெளிப்பாடே.
மேற்கத்திய இரட்டைமுகம் மட்டுமல்ல, இந்தியாவை ‘எதிரி’ என வர்ணிப்பது, ஒரு காலத்தில் காலனி ஆட்சியில் இருந்த நாடுகள் இன்னும் சமநிலையிலான உறவுகளை ஏற்கவில்லை என்பதையும் காட்டுகிறது.
இந்தியா எப்போது மீளுமோ என்று எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இந்தியா இன்று தன்னம்பிக்கையுடன் தனது நலன்களை காக்கும் நாடாக மாறியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
UK India Russia oil ties, Telegraph India enemy article, India Russia defence relations, S Jaishankar response UK, INS Tamal controversy, UK sheltering Indian fugitives, Indian refined oil to Europe, British hypocrisy India Russia, India strategic autonomy, Western criticism of India