மோசமான குற்றச்செயலில் ஈடுபட்ட புலம்பெயர்ந்தோர் நாடுகடத்தல்
இங்கிலாந்தில் மோசமான குற்றச்செயல் ஒன்றில் ஈடுபட்ட புலம்பெயர்ந்தோர் ஒருவர் சிறையிலடைக்கப்பட்டிருந்த நிலையில், தவறுதலாக அவர் விடுதலை செய்யப்பட்ட விடயம் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட புலம்பெயர்ந்தோர்
புகலிடக்கோரிக்கையாளர்களை ஹொட்டல்களில் தங்கவைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துவந்த நிலையில், ஹொட்டல் ஒன்றில் தங்கவைக்கப்பட்டிருந்த Hadush Kebatu என்னும் புலம்பெயர்ந்தோர் எசெக்ஸில் ஒரு 14 வயது சிறுமி மற்றும் ஒரு இளம்பெண்ணிடம் அத்துமீறினார்.

அதைத் தொடர்ந்து, கைது செய்யப்பட்டு சிறையிலடைக்கப்பட்டிருந்த Hadush வெள்ளிக்கிழமை நாடுகடத்தப்பட இருந்தார்.
ஆனால், சிறை அதிகாரிகள் தவறுதலாக அவரை விடுதலை செய்ய, தலைமறைவானார் Hadush.
Hadush தவறுதலாக விடுதலை செய்யப்பட்ட விடயம் பிரித்தானியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
Hadushஐ தீவிரமாகத் தேடிவந்த பொலிசார், இரண்டு நாட்களில், அதாவது, ஞாயிற்றுக்கிழமை காலை, அவரைப் பிடித்து மீண்டும் சிறையிலடைத்தார்கள்.
இந்நிலையில், நேற்று செவ்வாய்க்கிழமை, அவர் எத்தியோப்பியா நாட்டுக்கு நாடுகடத்தப்பட்டதாக பிரித்தானிய உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
அத்துடன், Hadush இனி பிரித்தானியாவுக்குள் நுழைய அவருக்கு அனுமதி அளிக்கப்படாது என்றும் உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |