ட்ரோன் ஊடுருவல்... சக நேட்டோ உறுப்பு நாட்டிற்காக களமிறங்கும் பிரித்தானிய இராணுவம்
பெல்ஜியத்தின் வான்வெளியில் ட்ரோன் ஊடுருவல்களை அடுத்து அதன் பாதுகாப்பை வலுப்படுத்த உதவும் வகையில் பிரித்தானிய இராணுவம் மற்றும் உபகரணங்கள் பெல்ஜியத்திற்கு அனுப்பப்படுகின்றன.
ரஷ்யாவின் மீதான
ஐரோப்பிய நாடுகளில் சமீபத்திய ட்ரோன் ஊடுருவல்கள் அனைத்தும் ரஷ்யாவின் மீதான சந்தேகத்தை வலுப்படுத்தியுள்ளது. மட்டுமின்றி, மேற்கத்திய நாடுகளின் தடைகளால் முடக்கப்பட்டுள்ள 300 பில்லியன் டொலர் ரஷ்ய சொத்துக்களில் பெரும்பகுதி பெல்ஜியத்தில் உள்ளது.

இந்த நிலையில், இங்கிலாந்து இராணுவத்தின் புதிய தலைவர் சர் ரிச்சர்ட் நைட்டன் தெரிவிக்கையில், இந்த வார தொடக்கத்தில் அவரது பெல்ஜிய பிரதிநிதி உதவி கேட்டதாக குறிப்பிட்டுள்ளார்.
பெல்ஜியத்தின் முக்கிய விமான நிலையமான Zavantem வியாழக்கிழமை இரவு ட்ரோன்கள் ஊடுருவலைத் தொடர்ந்து தற்காலிகமாக மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. ஒரு இராணுவத் தளம் உட்பட பிற இடங்களிலும் ட்ரோன்கள் காணப்பட்டுள்ளது.
இந்த ஊடுருவல்கள் ரஷ்யாவால் நடத்தப்பட்டதா என்பது தெரியவில்லை என்று கூறும் சர் ரிச்சர்ட், அவை ரஷ்யாவால் இயக்கப்பட்டிருப்பது நம்பத்தகுந்தது என்றும் கூறினார்.
மேலும், பெல்ஜியத்திற்கு உதவுவதற்கான முடிவு பாதுகாப்பு செயலாளர் ஜான் ஹீலியுடன் இணைந்து எடுக்கப்பட்டது என்றும் அவர் கூறினார்.

ஆதாரம் இல்லை
முன்னதாக வெள்ளிக்கிழமை, பிரஸ்ஸல்ஸின் வேண்டுகோளுக்குப் பிறகு, ட்ரோன் எதிர்ப்பு நடவடிக்கைகளுடன் பெல்ஜியத்திற்கு உதவ இருப்பதாக ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சகம் கூறியது.

இந்த இடையூறால் சுமார் 3,000 பிரஸ்ஸல்ஸ் ஏர்லைன்ஸ் பயணிகள் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில், ஜேர்மன் பாதுகாப்பு அமைச்சர் போரிஸ் பிஸ்டோரியஸ் மற்றும் பெல்ஜிய பாதுகாப்பு சேவைகளும் ரஷ்யாவை சந்தேகிப்பதாகக் கூறியுள்ளன,
ஆனால் பெல்ஜிய பாதுகாப்பு அமைச்சர் தியோ ஃபிராங்கன் தெரிவிக்கையில், இந்த விவகாரத்தில் இதுவரை உறுதியான எந்த ஆதாரமும் இல்லை என்று ஒப்புக்கொண்டார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |