உடற்பயிற்சி செய்வோரால் பால் பவுடர் விலை அதிகரிக்கலாம்: சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை

United Kingdom
By Balamanuvelan Aug 01, 2026 12:43 PM GMT
Report

உடற்பயிற்சி செய்பவர்கள், புரத இழப்பைத் தவிர்ப்பதற்காக புரோட்டீன் பவுடர்களை உட்கொள்கிறார்கள்.

ஆனால், அப்படி உடற்பயிற்சி செய்பவர்கள், புரோட்டீன் பவுடரை எடுத்துக்கொள்வது அதிகரிக்கத் துவங்கியுள்ளதால், குழந்தைகளுக்கான பால் பவுடர் விலை அதிகரிக்கக்கூடும் என பிரித்தானிய சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.

பால் பவுடர் விலை அதிகரிக்கலாம்

உடற்பயிற்சி செய்பவர்கள், உடற்பயிற்சி செய்வதால் தங்கள் உடலில் புரத இழப்பு ஏற்படுவதைத் தவிர்ப்பதற்காக, புரோட்டீன் பவுடர்களை உட்கொள்கிறார்கள். 

உடற்பயிற்சி செய்வோரால் பால் பவுடர் விலை அதிகரிக்கலாம்: சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை | Uk Milk Powder Price May Rise Due To Excersisers

இப்படி புரோட்டீன் பவுடர்களை பயன்படுத்துவோர் அதிகரித்துவருவதால், அந்த புரோட்டீன் பவுடர் விலை கணிசமாக அதிகரித்துள்ளது.

இந்த புரோட்டீன் பவுடரில் 80 சதவிகித தூய்மையான புரதம் (Whey protein) உள்ளது.

அந்த புரதத்தின் விலை, 2025ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு மெட்ரிக் டன்னுக்கு 10,050 பவுண்டுகளாக இருந்த நிலையில், தற்போது 22,137.36 பவுண்டுகளாக அதிகரித்துள்ளது.

விடயம் என்னவென்றால், குழந்தைகள், குறிப்பாக, ஒரு வயதுக்குக் கீழ் உள்ள குழந்தைகள் உணவாக உட்கொள்ளும் பவுடர் பால், தாய்ப்பாலை ஒத்திருக்கவேண்டும் என்பதால், இதே புரதம் (Whey protein) பால் பவுடரில் சேர்க்கப்படுகிறது. 

பிரான்சுக்கு இனி பணம் கொடுக்கக்கூடாது: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

பிரான்சுக்கு இனி பணம் கொடுக்கக்கூடாது: பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தல்

இந்நிலையில், உடற்பயிற்சி செய்வோரால் இப்படி அந்தப் புரதத்தின் தேவை அதிகரித்து, அதன் விலையும் அதிகரித்துவருவதால், விரைவில் குழந்தைகளுக்கான பால் பவுடர் விலையும் அதிகரிக்கக்கூடும் என பிரித்தானிய சுகாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளார்கள்.

கடந்த ஆண்டை ஒப்பிடும்போது, 750 கிராம் எடை கொண்ட பால் பவுடர் விலை, ஏற்கனவே 4.8 சதவிகிதம் அதிகரித்து, 11.55 பவுண்டுகளாக இருந்தது, தற்போது 12.11 பவுண்டுகளுக்கு விற்கப்படுகிறது.

ஆக, பால் பவுடர் விலை மேலும் அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுவதுடன், பால் பவுடர் தயாரிக்கும் பல நிறுவனங்கள், தாதுக்கள் நீக்கப்பட்ட, D90 demineralised whey powder என்னும் புரத பவுடரை பால் பவுடரில் பயன்படுத்தத் துவங்கியுள்ளதாகவும் துறைசார் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

உடற்பயிற்சி செய்வோர் பயன்படுத்தும் புரோட்டீன் பவுடரில் 80 சதவிகித புரதம் உள்ள நிலையில், D90 demineralised whey powder புரத பவுடரில் 10 முதல் 12 சதவிகித புரதமும், 70 முதல் 80 சதவிகித லாக்டோஸும் உள்ளது குறிப்பிடத்தக்கது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். 


மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வவுனியா, இரணைஇலுப்பைக்குளம், Toronto, Canada

08 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Caledon, Canada

06 Sep, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
நன்றி நவிலல்

கிளிநொச்சி, Rapperswil-Jona, Switzerland

08 Sep, 2026
நன்றி நவிலல்

நாரந்தனை வடக்கு, யாழ்ப்பாணம், Toronto, Canada

04 Sep, 2026
நன்றி நவிலல்

உசன், Jaffna, Ibadan, Nigeria, Riyadh, Saudi Arabia, London, United Kingdom

05 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, மல்லாவி

17 Oct, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Basel, Switzerland

05 Oct, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில் மேற்கு, Chur, Switzerland

05 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சென்னை, India

06 Oct, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கோப்பாய் தெற்கு

06 Oct, 2022
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புன்னாலைக்கட்டுவன்

08 Oct, 2011
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US