கெய்ர் ஸ்டார்மர் ஆட்சியில் பிரித்தானியாவை விட்டு வெளியேறும் மில்லியனர்கள்
லேபர் கட்சியின் ஆட்சியில் பிரித்தானியாவை விட்டு மில்லியனர்கள் வெளியேறுவது அதிகரித்திருப்பதாக தெரியவந்துள்ளது.
பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் ஆட்சிக்கு வந்த பின், தொழிலாளர் கட்சியின் வரி திட்டங்களால் மில்லியனர்கள் பிரித்தானியாவை விட்டு வெளியேறும் எண்ணிக்கை சாதாரணத்தை விட அதிகரித்துள்ளது.
New World Health நிறுவனத்தின் தகவல்படி, கடந்த ஆண்டு பிரித்தானியா 10,800 மில்லியனர்களை இழந்துள்ளது.
இது 2023-இன் எண்ணிக்கையிலிருந்து 157% அதிகரிப்பை காட்டுகிறது.
இதனால், சீனாவிற்கு பிறகு உலகின் மிகுந்த மில்லியனர்களை இழந்த நாடாக பிரித்தானியா ஆனது.
மில்லியனர்கள் முக்கியமாக இத்தாலி, சுவிட்சர்லாந்து, மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் போன்ற நாடுகளுக்கு குடிபெயர்ந்துள்ளனர்.
இந்த சூழலில், Rankin Brothers & Sons போன்ற 250 ஆண்டுகள் பழமையான குடும்ப தொழில்முனைவுகள் கூட வரி திட்டங்களால் பாதிக்கப்படுகின்றன.
2026 முதல், 1 மில்லியன் பவுண்டுகள் மதிப்பை மீறும் குடும்ப நிறுவனங்கள் 20% மரபாண்மை வரி செலுத்த வேண்டியுள்ளது, இது பெரிய சவாலாகும்.
மேலும், ஹோட்டல் வரி உள்ளிட்ட திட்டங்கள் சுற்றுலா பயணிகளுக்கு கூடுதல் செலவை உருவாக்கும் வாய்ப்பு உள்ளது. லேபர் கட்சியின் வரி திட்டங்கள் வளர்ச்சியை தடுக்கின்றன என தொழில்முனைவாளர்கள் மற்றும் வர்த்தக அமைப்புகள் கண்டனம் தெரிவிக்கின்றன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |