கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திருப்பிக் கொடுக்கும் விவகாரம்: பிரித்தானிய அமைச்சர் கூறியுள்ள தகவல்
கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திருப்பிக் கொடுப்பது தொடர்பில் பிரித்தானிய அமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
பிரித்தானிய அமைச்சர் கூறியுள்ள தகவல்
#WATCH | Delhi | On any communication between India & UK on 'Kohinoor', UK Secretary of State for Culture, Media and Sport, Lisa Nandy says," We've been talking between the UK and India for quite some time about the way that we think we can collaborate much more closely together… pic.twitter.com/Gn0ZPAjRBX
— ANI (@ANI) May 3, 2025
கோஹினூர் வைரத்தை இந்தியாவுக்கு திருப்பிக் கொடுப்பது தொடர்பில் இந்தியா முன்வைத்துள்ள கோரிக்கை தொடர்பில் பிரித்தானிய கலாச்சாரம், ஊடகம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சரான லிசா நந்தியிடம் கேள்வி எழுப்பினார்கள் ஊடகவியலாளர்கள்.
அதற்கு பதிலளித்த லிசா, பிரித்தானியா மற்றும் இந்தியாவிலுள்ள மக்கள், மிகவும் வித்தியாசமான காலக்கட்டத்தைச் சார்ந்த பல கலாச்சார கலைப்பொருட்களிலிருந்து பயனடையவும் அவற்றை அணுகவும் இயலும் வகையில், மிகவும் நெருக்கமாக இணைந்து பணியாற்றக்கூடிய வழிமுறை குறித்து நாங்கள் நீண்ட காலமாக பிரித்தானியாவுக்கும் இந்தியாவிற்கும் இடையில் பேச்சுவார்த்தைகள் நடத்திவருகிறோம்.

மகாராணியின் கிரீடத்தை முடிசூட்டுவிழாவின்போது கமீலா அணிவதில் என்ன சிக்கல்?: பின்னணியின் கோஹினூர் வைரத்தின் வரலாறு...
நான் எனது சக அமைச்சரான, இந்தியாவின் கலாச்சாரம் மற்றும் சுற்றுலா அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத்திடம் பேசிய விடயங்களில் இதுவும் ஒன்று என்று கூறினார் லிசா.
மஹாராஜா துலீப் சிங் என்னும் மன்னர், 1849ஆம் ஆண்டு, 108 கேரட் எடையுள்ள கோஹினூர் வைரத்தை ராணி விக்டோரியாவுக்கு வழங்கினார்.
1937ஆம் ஆண்டு, ராணி விக்டோரியா அந்த வைரம் பதித்த கிரீடத்தை அணிந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |